வனைக் குறித்தது. ‘குறிக்கொளாதது என்பது குறைந்து நின்றது. மணம் அணி மறையோர்- மங்கல விழாக்களை அழகு படுத்துகின்ற அந்தணர். மறையோரை வையத்தாரினின்று வேறு பிரித்தது, சிறப்புப் பற்றி. ‘வாழ நின்ற’ என இயையும். ‘திண்ணம்’ என்பது இடைக்குறைந்து, ‘‘திணம்’’ என வந்தது, ‘திண்மையாகிய மாடம்’ என்க. கண மணி-கூட்டமாகிய இரத்தினங்களையுடைய. இளங்கிளை - தம்பி. 74. ‘இளங்கிளை’ என்பதே ‘கிளைஇளையன்’ என மாறிநின்றது. ‘இளைய பிள்ளை’ என்றவாறு. சேய் - முருகன். ‘ இளங்கிளையாகிய முருகன்’ என்க. கிரி, கிரவுஞ்ச மலை. திளை - பலரும் இன்பம் துய்க்கின்ற. முளை இளங்களிறு-மிகவும் இளைய களிறு. ‘‘முருகவேள்’’ என்றதை. ‘‘களிறு’’ என்றதன் பின்னும் ‘‘பரிந்து’’ என்றதை, ‘‘சிறுமிக்கு’’ என்றதன் பின்னும் கூட்டுக. பரிந்து - அன்புகொண்டு 75. பரிந்த - வீசுகின்ற. சுடர் - விளக்கு. குழவி - கொழுந்து. சிந்துரம் - செந்நிறப் பொடி. மணி -மாணிக்கம் சுந்தரத்து அரசு - அழகின் தலைமை. முருகன் விற்படையும் |