உடையனாதலைக் கருதி, ‘‘சிலைக்கை மைந்தன்’’ என்றான். அம் சொல் - அழகிய சொல்; இஃது அதனையுடையாள்மேல் நின்றது. ‘ஐயுறும்’ என்றது முற்று. ‘வகையானே’ என உருபு விரிக்க. ‘அம் சொலாள், மையல் கொண்டு, மைந்தனை, சுந்தரத்து அரசாகிய இது, சுடரோ, பரிதியோ... ...என்ன வகைவகையாக ஐயுறும் ’ என்க. 76. உழிஞை அமர். முற்றுகை இட்டுச் செய்யும் போர்.தாளாளன் - வீரன். திகை - திசை. தொகை - எண் : அவை, நூறு, ஆயிரம், நூறாயிரம், கோடி முதலியவாம். நாமம் - பெயர். திருவடிக்கு - திருவடியை அடைதற்பொருட்டு ; என்றது ‘தன்னைப் பணிகொள்ள ஏற்றுக் கொள்ளுதற்பொருட்டு’ என்றவாறு. துடி இடை -உடுக்கைபோலும் இடையை உடையாள். ‘கடலன்ன காமம் உழப்பினும் பெண்டிர் மடல் ஏறுதல் இல்லை’ (குறள்-1137.) ஆயினும், அவளது பெருந்துயரைப் புலப்படுத்த, ‘மடல் ஏறத் தொடங்கினள்’ என்றாள். ‘மயல் தொடங்கினள்’ என்பதும் பாடம். 77, தொங்கல் - மாலை, புறஇதழ் சிறப்பில்லாததாகலின், ‘அதனையேனும் கொடுத்திலன்’ என்றாள். இடங்கொள் அக்குறத்தி திறத்திலும் - தன்பால் இடங்கொண்டு இருக்கும் |