திருச்சிற்றம்பலம்
79. கொழுந் திரள் வாய் ஆர் தாய்- செழுமையாய்த் திரண்ட வாயினையுடைய செவிலி. வழிபடுவோர்க்கு வரங் கொடுத்தல் பற்றி அமரரை, ‘‘தூமொழி அமரர்’’ என்றார். ‘செப்புறைச் சொல்’ என இயைத்து, ‘செப்பென்னும் உறைபோல்வதாகிய சொல்’ என உரைக்க. முருகனாகிய அருமணியைத் தன்னுட் கொண்டிருத்தல் பற்றி இங்ஙனம் கூறினார். ‘செப்புரை’ எனவும், ‘செப்புதல்’ எனவும் பாடம் ஓதுப. வாய்ந்த- பொருந்திய : இதனை, ‘‘கோமகனை’’ என்றதனோடு கூட்டுக. ‘‘இவை’’ என்றதில், ‘இவற்றால்’என உருபு விரிக்க. சுவாமி - முருகன் ‘‘சுவாமியையே’’ என்ற ஏகாரம் அசைநிலை ‘கேட்பார்க்கு’ என்னும் நான்காவது, தொகுத்தலாயிற்று. ‘மனம் இடர்கெடும்’ என, இடத்து நிகழ்பொருளின் தொழில் இடத்தின்மேல் ஏற்றப்பட்டது. ‘‘மாலுலா மனம்’’ என்பது, முதல் திருப்பாட்டிற் சென்று மண்டலித்தல் அறிக.
நாவிரவு மறையினராய் நாமிவரி லொருவரெனுந் தேவர்கடே வனசெல்வச் செல்வர்களாய்த் திகழ்வேள்வி பாவுநெறி பலசெய்யும் பான்மையராய் மேன்மையரா மூவுலகுந் தொழுமூவா யிரமுனிவ ரடிபோற்றி. 10 தந்தையெனா திகழ்ந்தபுகழ்ச் சண்டேசர் விற றகுமெய்ச் சிந்தையரா யெல்லையிலாத் திருவேடத் தினராகி யெந்தைபிரா னருள்வளர்க்கு மியல்பினராய் முயறவங்க ளந்தமிலா வடியவர்க டிருக்கூட்ட மவைபோற்றி. 11 -கோயிற்புராணம். |