பக்கம் எண் :

திருமுறை]11. திருமுகத்தலை79


119. 
 

என்னைஉன் பாத பங்கயம் பணிவித்
   தென்பெலாம் உருகநீ எளிவந்
துன்னைஎன் பால்வைத் தெங்கும்எஞ் ஞான்றும்
   ஒழிவற நிறைந்தஒண் சுடரே !
முன்னைஎன் பாசம் முழுவதும் அகல
   முகத்தலை யகத்தமர்ந் தெனக்கே
கன்னலும் பாலும் தேனும்ஆ ரமுதும்
   கனியுமாய் இனியைஆ யினையே.               (8)
 

120.

அம்பரா ! அனலா ! அனிலமே ! புவிநீ
   அம்புவே ! இந்துவே ! இரவி
அம்பரால் ஒன்றும் அறிவொணா அணுவாய்
   ஒழிவற நிறைந்தஒண் சுடரே !

 

என்றதனையும்,     முரிதலையும் திருக்களந்தை      ஆதித்தேச்சரப்
பதிகத்துள்ளும்     காண்க.    பேய்களோம்-பேய்போன்றவர்களாகிய
யாங்கள்.     தம்போல்வாரையும்     உளப்படுத்து        இவ்வாறு
அருளிச்செய்தார்.

119. ‘‘எங்கும் எஞ்ஞான்றும் ஒழிவற நிறைந்த ஒண்சுடரே’’ என்றது,
‘அந்நிலை  எனக்குப் புலனாம்படி நின்ற ஞானவடிவினனே’ என்றபடி.
எனவே,  இது, தம் அனுபூதி நிலையை எடுத்தோதியதாயிற்று. ‘‘பாசம்’’
என்றது,  வினையைக்  குறித்தது.  ‘அகலப் பணிவித்து’ என முன்னே
கூட்டுக. ‘‘கனியும் ஆய்’’ என்றதில் ‘ஆய்’ என்பதற்கு, ‘போன்று’ என
உரைக்க.   ‘இதற்கு   யான்   செய்யும்   கைம்மாறு  என்’  என்பது
குறிப்பெச்சம்.

120,     அம்பரன்-ஆகாயமாய் இருப்பவன். அனலன்-நெருப்பாய்
இருப்பவன். அனிலம் முதலியன இங்ஙனம் அன்பெற்று வாராமையின்,
அவை  ஆகுபெயர்களாம்.  அனிலம்-காற்று  ஏனையபோல; ‘புவியே’
என்பதே     பாடமாதல்    வேண்டும்.    புவி-நிலம்.    அம்பு-நீர்.
இந்து-சந்திரன்.  ‘இரவீ’  என்பதே பாடம்போலும். இறைவனது அட்ட
மூர்த்தங்களுள் இயமானன் ஒழித்து ஒழிந்த உருவங்களை எடுத்தோதி
விளித்தார்.  ‘‘அணுவாய்’’ என்றது, ‘நுண்ணிய பொருளாய்’ என்றவாறு.
மொய்ம்பு-வலிமை  ;  இங்கு,  மன  உறுதியை  யுணர்த்திற்று.  நலம்
சொல்-உறுதியை உரைக்கின்ற. ‘‘மூதறிவாளர்