திருச்சிற்றம்பலம்
முகத்தலை’’ என்றதில் தொக்குநின்ற ஆறாவது, ’யானையது காடு’ என்பதுபோல. வாழ்ச்சிக் கிழமைக்கண் வந்தது. ‘‘எம்பிரான்’’ என்றது, ‘இறைவன்’ என்னும் அளவாய் நின்றது. ‘‘மீண்டு’’ என்றது, ‘மற்றும்’ என்னும் பொருள் பட வந்தது. 121. மூலம்-முதல். இறைவன் மூலமும், முடிவுமாதல் உலகிற்கு. அவற்றைத் தனக்கு இலனாதலின், ‘‘முடிவிலா முதலாய்’’ என்றார். இங்கு ‘‘முதல்’’ என்றது, ‘பொருள்’ என்னும் பொருட்டு. ஆலையம் பாகு-கரும்பு ஆலையிடத்து உள்ள பாகு. அம், சாரியை. ‘சொல்லையுடைய கருவூர்’ என்க. ‘கருவூரது மாலை’ என இயையும். சீலமா-ஒழுக்கமாக (கடமையாக)க் கொண்டு, ‘நிற்பார்’ என்பது, துணிவு பற்றி,‘‘ நின்றார்’’ என இறந்தகாலமாகச் சொல்லப்பட்டது.
ஒன்றியசீ ரிரவிகுல முவந்தருளி யுலகுய்யத் துன்றுபுகழ்த் திருநீற்றுச் சோழனென முடிசூடி மன்றினடந் தொழுதெல்லை வளர்கனக மயமாக்கி வென்றிபுனை யநபாயன் விளங்கியபூங் கழல்போற்றி. -கோயிற்புராணம். |