145. ‘‘முத றேவர்’’ என்பதல்லது. ‘முதற் றேவர்’ என்பது பாடமாகாது. ஏம்பலித்து-வருந்தி, தேம் புனற் பொய்கை-தேனொடு கூடிய நீரையுடைய பொய்கையின் நீரை. பொய்கை, ஆகுபெயர். தேறல்-தேன். ‘‘ஒழுகும்’’ என்றது, ‘பணை’ சோலை’ என்னும் இரண்டனையும் சிறப்பித்தது. பணை-வயல், ‘பணை வீதி, சோலை வீதி’ எனத் தனித்தனி முடிக்க. 146. கரை-ஒலிக்கின்ற. கடல் ஒலியின்-கடல் ஒலி போன்ற ஒலியினையுடைய. ‘‘தமருகத்து அரையின்’’ என்பது முதல், ‘‘இயங்க’’ என்பதுகாறும் உள்ள பகுதியால் இறைவன் தனது தமருகத்தினின்றும் ஒலியை எழுப்பும் முறை விளக்கப்பட்டது. தமருகம்- உடுக்கை. ‘அதன் அரைக்கும் உனது கைக்குமாகக் கட்டப்பட்டுள்ள கயிற்றினால் அதன் இருபக்கத்தும் ஒருநாவே சென்று தாக்கி ஒலியை எழுப்ப, அந்நிலையோடே எங்கள் கண்களின் முன்னே ஒருநாள் வந்து இருந்தருள்’ என்றவாறு. விரி-விரிவு ; முதனிலைத் தொழிற் பெயர். ‘‘விழவு’’ என்றது, அதிற்கூடும் மக்கட் கூட்டத்தினை. பாடல் பாடுவோர் மக்கட் கூட்டத்தின் நெருக்கத்திடையே செல்லாது பின்பு செல்லுதலின், ‘‘விழவின்பின் செல்வோர் பாடல்’’ என்றார். ‘விழவிற் பின்செல்வோர் பாடல்’ எனப் பாடம் ஓதி விழாவில் ‘நின்பின் செல்வோரது பாடல் ; என்று உரைத்தலும் ஆம். பாடல் வேட்கையின்-பாடல்மேல் எழுந்த வேட்கையினால், ‘வீழ்ந்த புரிசடை, போது அவிழ்ந்த புரிசடை’ என்க. ‘நின்புரிசடை’ என உரைக்க. வீழ்ந்த-அவிழ்ந்த, அடியாரது |