பாடலை இறைவன் இனிதாகக் கேட்டுத் தலையை அசைத்தலால், கட்டியுள்ள அவனது சடை அவிழ்ந்து வீழ்ந்தது. துகுக்கும்- தூர்க்கின்ற ; நிரம்பச் சொரிகின்ற. ‘‘போது அவிழ்ந்த புரிசடை’’ என்றதனால், சொரியப்படுவன அப்போதுகளே ஆயின. போது-பேரரும்பு ; அவை, கொன்றை, ஆத்தி முதலியவற்றின் அரும்புகளாம். அவிழ்ந்த-மலர்ந்த. ‘விழாக் காலங்களில் இறைவனது சடைக்கண் உள்ள மலர்களே வீழ்ந்து நிரம்பும் பெருமையை உடையன, திருப்பூவணத்தின் கடை வீதிகள்’ என்றவாறு. 147. கண் இயல் மணியின் சூழல், கண்மணி இருக்கும் இடம். அவ்விடத்தில் நீ புகுதலால் அங்குத்தானே உன்னைக் கலந்து, உன்னுள் ஒடுங்கின எனக்கு’ என்க. இஃது இறைவனைக் கண்ணாற் கண்டமையால் அவனுடன் கலந்தமை கூறியவாறு. இக்கருத்துப்பற்றியே, கண்மணியே தாம் இறைவனோடு கலந்த இடமாகக் கூறினார். ‘‘சூழல் புக்கு’’ என்றதில், ’புகுதலால்’ என்பது, ‘புக்கு’ எனத்திரிந்து நின்றது. ‘‘நுண்ணியை’’ என்பது, ‘சிறியை’ எனப் பொருள் தந்தது. ‘‘அங்ஙன் நுண்ணியை’’ என்றது, ‘என் கண்மணி யளவாய் நிற்கும் சிறுமை யுடையை’ என்றதாம்.நுண்ணிமை- நுட்பம் அஃது இங்கு, வியாபகத்தைக் குறித்தது. இறந்தமை- கடந்தமை. ‘வியாபகப் பொருள் பலவற்றையும் கடந்து வியாபகமாய் நிற்பது நின் பெருமை’ என்றதாம். மண் இயல் மரபின்-ஒளி இல்லாத இடத்தில் இருள் நிறைந்திருப்பது’ |