பக்கம் எண் :

திருமுறை]14. திருப்பூவணம்101


151.

பூவணம் கோயில் கொண்டெனை ஆண்ட
   புனிதனை, வனிதை பாகனை, வெண்
கோவணங் கொண்டு வெண்டலை ஏந்தும்
   குழகனை, அழகெலாம் நிறைந்த
தீவணன் றன்னைச் செழுமறை தெரியுந்
   திகழ்கரு வூரனேன் உரைத்த
பாவணத் தமிழ்கள் பத்தும்வல் லார்கள்
   பரமன துருவமா குவரே.                      (10)

திருச்சிற்றம்பலம்
 


151.  ‘‘வெண்டலை’’ என்றது, பிரம கபாலத்தை இது சிவபிரானுக்குப்
பிச்சைப்    பாத்திரமாவது.  குழகன்-இளையோன், தாருகாவன முனிவர்
பன்னியர்பால்      பிச்சைக்குச்    சென்ற    பொழுது    சிவபிரான்
இளைஞனாய்ச்   சென்றமை  அறிக.  ‘‘தெரியும்’’ என்பது, ‘‘கருவூரன்’’
என்றதன்  இறுதி  நிலையோடு முடியும். ‘பாவாகிய வண்ணத் தமிழ்கள்’
என்க.    வண்ணம்-அழகு.     ‘‘பத்தும்’’   என்றதனால்   இதன்கண்
இருதிருப்பாடல்கள் கிடையாவாயின என்க.


பொருவிலரு ணெறிவாழ்க புரைநெறிகண் மிகவாழ்க
வரைவிறிருத் தொண்டரணி வளர்கதிருத் தொண்டரணி
யருள்விரவக் கற்றோர்க்கு மடர்புலன்போக் கற்றோர்க்கு
மருவுபுக லம்புலியூர் மாடமலியம்புலியூர்.                       18 

இரும்பொத்துச் சிறிதிடமு மின்றெனக்கின் றருளாலே
சுரும்புற்ற நறையிதழித் தொடைமுடியோ னமரர்தொழக்
கரும்புற்ற வரவாடக் காரிகையி னுடனாடும்
பெரும்பற்றப் புலியூரா யிருந்ததுளம்பெரிதாயே.                  19

தேசமலி பொதுஞானச் செவ்வொளியுந் திகழ்பதியா
மீசனது நடத்தொழிலு மிலங்குபல வுயிர்த்தொகையும்
பாசமுமங் கதுகழியப் பண்ணுதிரு வெண்ணீறு
மாசிறிரு வெழுத்தஞ்சு மநாதியிவையாறாக.                     20

                                       -கோயிற் புராணம்.