பக்கம் எண் :

108கருவூர்த் தேவர் திருவிசைப்பா[ஒன்பதாந்


161.

தாட்டரும் பழனப் பைம்பொழிற் படுகர்த்
   தண்டலைச் சாட்டியக் குடியார்
ஈட்டிய பொருளாய் இருக்கும்ஏ ழிருக்கை
   இருந்தவன் திருவடி மலர்மேற்
காட்டிய பொருட்கலை பயில்கரு வூரன்
   கழறுசொன் மாலைஈ ரைந்தும்
மாட்டிய சிந்தை மைந்தருக் கன்றே
   வளரொளி விளங்குவா னுலகே.                 (10)
 

திருச்சிற்றம்பலம்


161,     தாள் தரும் பழனம் - முயற்சியை  (உழவை) உள தாக்கும்
வயல்கள்.  இதில் டகரஒற்று விரித்தல்.   ‘பழனத்தையும், பொழிலையும்,
படுகரையும்,   தண்டலையையும்     உடைய  சாட்டியக்  குடி’  என்க.
‘‘காட்டிய  பொருளையுடைய  கலை’’   என்றது. ‘‘பொருளைக் காட்டிய
கலை’  என்றபடி.  பொருள்  - மெய்ப்பொருள். ‘‘ஈரைந்தும் மாட்டிய’’
என்றது,  இரண்டாவதன் தொகை. மாட்டிய - பொருத்திய.  ‘‘வானுலகு’’
என்றதன்பின், ‘உளதாவது’ என்பது சொல்லெச்சமாய் நின்றது.


கற்பங்க டொறுநடஞ்செய் கழலடைந்தோர் கணிப்பிலர்தஞ்
சிற்பங்க டரும்புகழுஞ் சென்றனவிச் செல்காலத்
தற்பங்கொ டுதிக்குமிறை யருடருமென் றனரென்றார்
சொற்பந்த முறுமனமே துணையாகத் தொடங்குதலும்.              21

ஆராத மனமினிய வானந்த நடத்தளவுஞ்
சாராத தன்மையினாற் றகுமொழிக்குச் சொற்படுத்த
வாராதென் றறிந்தாலு மற்றதுகட் புலப்படலா
லோராத பேராசை யொருக்காலு முலவாதால்.                    22

காதரமார் தருமனமே கமலமல ரயனல்லை
சீதரமா யனுமல்லை சிவனுமனற் றிரளல்ல
னீதரமா வருளுடையை நிரைகலங்கே லினிமன்றி
லாதரமா துடனாடு மண்டனடங்
கண்டனையால்.                                            23
 
                                          --கோயிற் புராணம்.