பக்கம் எண் :

114கருவூர்த் தேவர் திருவிசைப்பா[ஒன்பதாந்



 

மின்னெடும் புருவத் திளமயி லனையார்
   விலங்கல்செய் நாடக சாலை
இன்னடம் பயிலும் இஞ்சிசூழ் தஞ்சை
   இராசரா சேச்சரத் திவர்க்கே.                   (8)
 

170.

மங்குல்சூழ் போதின் ஒழிவற நிறைந்து
   வஞ்சகர் நெஞ்சகத் தொளிப்பார் ;
அங்கழற் சுடராம் அவர்க்கிள வேனல்
   அலர்கதி ரனையர் ; வா ழியரோ !
பொங்கெழில் திருநீ றழிபொசி வனப்பிற்
   புனல்துளும் பவிர்சடை மொழுப்பர்
எங்களுக் கினியர் இஞ்சிசூழ் தஞ்சை
   இராசரா சேச்சரத் திவர்க்கே.                   (9)
 

யிருக்க.  ‘கோயிலாக’  என,  ஆக்கம் வருவிக்க. ‘‘நெஞ்சு’’ என்றதனை,
‘‘என்’’   என்றதனோடு    கூட்டுக.  மறக்கேன்-மறவேன்  ;  இவ்வாறு
முன்னும்  வந்தது.   ‘‘நெடும்புருவத்து’’   என்பதனை  முன்னே கூட்டி,
‘மின்னும்  இளமயிலும்   அனையார்’  என உரைக்க. விலங்கல்- மலை,
செய், உவம உருபு. ‘நாடக சாலைக்கண்’ என உருபு விரிக்க.

170.     மங்குல்    சூழ்    போதின்-மேகத்தால்  மறைக்கப்பட்ட
ஞாயிற்றைப்போல.  ‘பாலின்  நெய்போல’ என்ற உவமை போல, இஃது
இறைவன்   எங்கும்   இருந்தும்   விளங்காது  நிற்றற்குக்  கூறப்பட்ட
உவமை.    ‘‘ஒழிவற    நிறைந்து’’    என்பதை   முதலிற்   கூட்டுக.
அங்கு-அவ்விடத்தில்;  நெஞ்சில்,  அழல்  சுடராம் அவர்க்கு-எரிகின்ற
விளக்குப்போல  ஒளியுடையராய்  இருக்கின்ற   அன்பர்க்கு.  வேனல்
அலர்   கதிர்  அனையர்-வேனிற்  காலத்து   விரிந்து  விளங்குகின்ற
ஞாயிறு   போலப்   பேரொளி   வீசிநிற்பவர்.   திருநீறு  அழிபொசி
வனப்பின்-திருநீறு  அழிந்து  குழைகின்ற   அழகோடு. புனல் துளும்பு
சடை   மொழுப்பர்-நீர்   ததும்புகின்ற    சடைமுடியை   உடையவர்.
சடையிலுள்ள   நீர்   துளும்புதலால்   திருமேனியிற்  பூசியுள்ள  நீறு
அழிந்து குழைகின்ற அழகையுடையர்’   என்பதனை இவ்வாறு கூறினார்.
‘‘வாழியர்’’  என்றதனை வியங்கோளாகவும்,  ஓகாரத்தைச் சிறப்பாகவும்
வைத்து  ‘‘வாழியரோ’’  என்றதனை  இறுதியிற்  கூட்டி, ‘ஒளிப்பவரும்,
அனையவரும், இனியவரும் ஆகிய