இவர்பொருட்டு (இவரை வணங்குதற் பொருட்டு) யான் வாழ்வேனாக’ எனக் காதலுடையாள் கூற்றாக உரைக்க. இவ்வாறன்றி, ‘வாழி, அரோ என்பன அசைநிலைகள் எனக் கொள்ளின், இராசராசேச்சரத்து இவரே’ என்பது பாடமாதல் வேண்டும். 171. தனியர்-ஒருவர், எத்தனை ஓராயிரமாம் தன்மையர்- எத்துணையோ ஆயிரப்பொருளாயும் நிற்கும் தன்மையை உடையவர். ‘‘ஏகன் அனேகன் இறைவன்’’ எனத் திருவாசகத்துள்ளும் (சிவபுராணம்-5.) கூறப்பட்டது. என் வயத்தினராம் கனியர்-எனக்கு உரியவர் ஆகிய கனிபோல்பவர். ‘‘அத் தரு தீங்கரும்பர்’’ என்றதனை, ‘தீதரு அக்கரும்பர்’ என மாற்றி, ‘இனிமையைத் தருகின்ற அத்தன்மையை யுடைய கரும்புபோல்பவர்’ என உரைக்க. கட்டியர்-அணிந்தவர். அட்ட ஆரமிர்தர். மிகக் காய்ச்சிய அரிய பால்போன்றவர். மிகக் காய்ச்சிய பால் மிக்க சுவையுடைத்தாதல் அறிக. ‘பொய் இலா மெய்யர்க்கு எத்தனையும் இனியர்’ என்க. ‘‘இவர்க்கே’’ என்றதன்பின், முன்னைத் திருப்பாட்டிற் சொல்லிய ‘‘வாழியரோ’’ என்றதனை இங்கும் வருவித்து முடிக்க. அவ்வாறு வருவியாதொழியின், முன்னர்க் கூறியவாறே இங்கும், ‘இவரே என்பதே பாடமாதல் வேண்டும். 172. சரளம்-தேவதாரு. வகுளம்-மகிழ். நந்தன வனத்தின் இருள்விரி மொழுப்பின் இஞ்சி-நந்தவனத் |