திருச்சிற்றம்பலம்
தின் அருள் அடர்ந்த உச்சியை உடைய மதில். அருமருந்து-காயகற்பம். இவ்வாசிரியர் காயகற்பம் அருந்தி நெடுநாள் வாழ்ந்தார் என்ப. அல்லல்-இறப்புத் துன்பம். பொருள் மருந்து-சொற்பொருளாகிய அமிர்தம்.
நாதனருள் பிரியாத நந்திதரச் சனற்குமரன் வேதவியா தனுக்களிக்க மேன்மையெலா மவன்விளங்கிச் சூதமுனி தனக்குதவச் சோபான வகைதொகுத்த மூதறிவா லவன்மொழிந்த புராணமவை மூவாறில். 24 நலமலியுந் திருத்தில்லை நடராசன் புகழ்நவிலும் பலகதியில் யானறிந்த படிபடியிற் பயிறாரிச் செலவினர்போ லெவ்வழியுஞ் செவ்வழியாச் சிறிதியங்கித் தொலைவில் பெரும் பதியணையத் துணிந்தருளே துணையாக 25 மங்கலமார் திருமன்றின் மன்னனடம் வளர்புலிக்காற் பங்கமில்சீ ரருண்முனிக்கும பதஞ்சலிக்கும் பணித்தருளிச் சிங்கவரு மன்றனக்குந் தெரிவித்துத் திருவருளா லங்கவரைப் பணிகொண்ட வடைவறிந்த படிபுகல்வாம். 26 சொல்லோடும் பொருளோடுந் துணிவுடையோர் சொற்றனரென் றெல்லோருங் கொளவெட்டு மிரண்டு மறியாதோமும் வல்லோர்போ லொருபனுவன் மதித்தோமா னவைபொறுக்க நல்லோரை யிரந்தோமே னகையாமென் றுரையாமால். 27 என்றுமருந் தவமுயல் லினிவேண்டா மியாவர்க்கும் பொன்றுமுடல் கன்றுமுனிப் பொற்கோயிற் புகழ்மாலை சென்றுசெவிப் புலன்புகுமேற் றீவினைக ளவைதீர்க்கு மன்றினருள் புரிவிக்குந் தெரிவிக்கு மலர்ப்பாதம். 28 ---கோயிற் புராணம்
|