நிணம் - ஒரு பக்கத்தில் இடப்பட்ட பிணத்தினது நிணத்தை. துரு கழல்-பிணத்தைத் தேடி ஓடுகின்ற கால். ‘யாமத்தே ஆடும்’ என இயையும். அருள்புரி முறுவல் - அருள் வழங்குதலைக் குறிக்கின்ற நகைப்பு. புன்னகையாதலின், ‘‘முகிழ்நிலா’’ என்றார். முகிழ்த்தல் -அரும்புதல். ‘புன்முறுவலாகிய இள நிலாவோடு தோன்றுதலின் செம்மேனி அந்திபோன்றொளிரும்’ என்க. ‘திருமேனிக்கண்’ என உருபு விரிக்க. வரி-கீற்று. 179. ‘‘எழிலை, அழலை, தொழிலை’’ என்னும் இரண்டனுருபுகளை ஏழனுருபாகத் திரிக்க. எழிலை ஆழ் செய்கைப் பசுங்கலன்-அழகின்கண் ஆழ்த்துகின்ற (அழகு மிகுமாறு செய்கின்ற) செயற்பாட்டையுடைய பச்சை மட்கலம். உருகி-கரைவதாய். அழலை ஆழ்பு-நெருப்பில் மூழ்கிய பின்பு. உருவம்-தனது வடிவம். புனலொடும் கிடந்தாங்கு-நீரிலே மூழ்கினாலும் அதனுடன் கேடின்றி இருந்தாற்போல. ஆதனேன்-அறிவிலேனாகிய எனது. ‘ஆதனேன் நெஞ்சம்’ என இயையும். இடர்ப்படா வண்ணம்-மயக்கத்திற்படாதபடி. ‘‘இடர்’’ என்றது, ஆகுபெயராய், அதற்கு ஏதுவாகிய மயக்கத்தைக் குறித்தது. ‘இடர்ப்படாவண்ணம் புகுந்தோன்’ என இயையும். இறை வனால் ஆட்கொள்ளப்பட்ட பின்பு மாதராரது கலவியில் மிக ஆழ்ந்தபோதும் உள்ளம் அதனால் திரிவுபடாமையாகிய அஃதொன்றையே கூறினாராயினும், மேற்போந்த உவமையால், முன்பு அவரை எதிர்ப்பட்ட ஞான்றே உள்ளம் திரிந்து வேறுபட்டமையைக் கூறுதலும் கருத்தென்க. இஃது இறைவன் |