நின் அரங்கு ஆடகத்தால் அமைந்த அம்பலம்’ எனக் கொண்டு கூட்டி உரைக்க. ‘பாடகம், நூபுரம், சிலம்பு’ என்பன, மகளிரது காலில் அணியும் அணிவகைகள். பேர்ந்து-அசைந்து. சூடகம்-கைவளை. நாடகம்-கதை தழுவிய கூத்து. ‘அது போலும் கூத்து’ என்க. அஃதாவது, கதைப் பொருளைக் கைகாட்டி ஆடும் கூத்து. இன் கூத்து-இனிய கூத்து. நவிற்றுதல்-செய்தல். மேய்ந்து-வேயப்பட்டு. 193. உருவத்து-அழகையுடைய. ‘எரியுருவாய் ஆடு அரங்கம்’ எனவும், ‘ஏத்த ஆடு அரங்கம்’ எனவும் இயையும். ‘அரங்கம் மாளிகை சூழ்ந்து அரவிக்கும் அம்பலமே ஆயிற்று’ என்க. இரவி-சூரியன். அரவிக்கும் -ஒலியை உண்டாக்குகின்ற. 194. சேடர்-தொண்டர். ‘பூந்துருத்திக் காடன் சிற்றம்பலத்தான்றன் ஆடல் அதிசயத்தை அறிந்து கருத்து அறிந்து பாடும் தமிழ் மாலையாகிய இவை பத்தும் வல்லார், பற்றிய நிலை பற்றுவர்’ எனக் கொண்டு கூட்டுக. கருத்து பாடக் கொள்ளும் பொருள். பற்றும் நிலை-அடையத்தக்க நிலை; வீடு. பற்றுவர்-அடைவர். |