முடிசூட்டப்பெறும் வழக்கத்தையும் உடையராய் இருந்தனர். இவ்வாசிரியரும் அம்மன்னருள் ஒருவராதல் இங்கு நினைக்கத்தக்கது. 203. நெடியான்-திருமால், முடியால்-ஒருவர் மகுடத்தோடு. முடிகள் மோதி-மற்றவர் மகுடங்கள் தாக்குதலால். உக்க-சிந்திய. முழுமணி-குற்றமற்ற இரத்தினம். கடி-நறுமணம். இத்திருப்பாடற் பொருளோடு. ‘‘வந்திறை யடியில் தாழும் வானவர் மகுட கோடிப் பந்தியின் மணிகள் சிந்த வேத்திரப் படையால் தாக்கி அந்தியும் பகலும் தொண்டர் அலகிடும் குப்பை யாக்கும் நந்தியெம் பெருமான் பாத நகைமலர் முடிமேல் வைப்பாம்’’ என்னும் திருவிளையாடற் புராணச் செய்யுளை ஒப்புநோக்கிக் காண்க. 204. சீரால் மல்கு-புகழால் உலகெங்கும் நிறைந்த, ‘‘தஞ்சையர் கோன்’’ என்றதனால், இவர் தஞ்சாவூரைத் தலைநகராகக் கொண்டிருந்தமை பெறப்படும். ‘‘கோழிவேந்தன்’’ என்றது மரபு குறித்ததாய், ‘சோழ மன்னன்’ என்னும் அளவாய் நின்றது. ‘கோழி வேந்தன், தஞ்சையர் கோன் கண்டராதித்தன் அம்பலத்தாடி தன்னைக் கலந்த அருந்தமிழ் |