திருச்சிற்றம்பலம்
மாலை’ என்க. ஆரா இன்சொல்-தெவிட்டாத இனிமையையுடைய சொல்லையுடைய. பேரா உலகு- சென்றடைந்தோர் நீங்காது நிலைபெறும் உலகம்; வீட்டுலகம்.
தனிப்புதல்வன் றனையணைத்துத் தகவுச்சி மோந்து சடங் கனைத்துமடை வினிலியற்றி யருமறைநூ லவைகொடுத்து மனத்துணையாந் திருநாம மருவுநெறி யுபதேசித் தினிச்செயவேண் டுவதென்கொ லெனமொழிந்தா னெழின் [முனியன் 2. இந்தவகை சிவனருளா லிரவியெதிர் மணியுமிழ வந்தவன லெனவிளங்கு மழமுனிவ னடிவணங்கித் தந்திரமுன் புகலுமருந் தவத்தொகையிற் றலையான வந்தமின்மா தவமடியேற் கருளுகென வுரைசெய்தான். 3 தவமெவையு முணர்ந்தமுனி தனயன்முக மிகநோக்கிப் புவனமலி போகங்கள் பொருந்துமருந் தவம்புரிந்தாற் சிவகதியு மிதுவன்று சிவார்ச்சனமார்ச் சனமாகிற் பவமகலும் பரபோகம் பெறலாகு மெனப்பகர்ந்தான். 4 சொன்னமொழி கொண்டிறைவன் றோன்றிமகிழ்ந் துளதானம் பன்னுகென மழமுனிக்குப் பார் முழுதும் பரப்பிரம சன்னிதியன் றெனக்காண்ட றவக்குறைகா ணென்றாலு மன்னிடமாய் நிகழுமிட முளதென்றான் மாமுனிவன். 5 பாருயிர்கட் குபகரித்துப் பரப்பினடுப் படுவதொரு மேருகிரி யும்புடைசூழ் வெற்புமவற் றிடைநாடு மாருயிர்கள் பயனருந்து மமருலகா மெனக்கழித்தான் சீருலவு நாறுவளர் செறுவெனலாஞ் செறிமையுற. 6 -கோயிற்புராணம். |