அலம்பி-கிண்டி. புலம்பி-முறையிட்டு். தானவர்-அசுரர். பொற் கூத்து - பொன்போலச் சிறந்த நடனம், சிலம்பு- ஒலிக்கின்ற. இதனுள்ளும், ‘‘அணி, சிந்தை’’ என்பன கூன். 217. குருண்ட - சுருண்ட. ‘‘மிழற்றிய’’ என்னும் இறந்த காலம், ‘அத்தன்மையைப் பெற்ற ’ என்னும் பொருட்டு. திரண்ட - நெருங்கிய. திருமல்கு - அழகு நிறைந்த; இது சிற்றம்பலத்தைச் சிறப்பித்தது. மருண்டு-வியந்து. மணி-மாணிக்கம். வான் குறங்கு-சிறந்த துடை. 218, போழ்ந்து - உரித்து, ‘உமையது அச்சத்தைப் பின்னர்க் கண்டவன்’ என்க. இனி, ‘‘கண்டவன்’’ என்றதற்கு’ ‘உண்டாக்கினவன்’ எனப் பொருள் கொண்டு, ‘உமைக்கு என நான்காவது விரித்தலும் ஆம். தாழ்ந்த புனல் - ஆழ்ந்தநீர். தொடுத்து வீக்கும் - வளைத்துக் கட்டிய. பொன் நூல்-அழகிய |