பூணநூல். ‘‘பொன்னூல் தன்னினொடு’’ என்பதை ‘‘சிற்றம்பலவன்’’ என்றதன் பின்னர்க் கூட்டுக. தாழ்ந்த கச்சு-பொருந்திய கச்சு. இப்பாடலில் சீர்கள் சிறிது வேறுபட்டு வந்தன. 219. ‘‘பந்த பாசம்’’ என்றது, செயற்கையாகிய மாயை கன்மங்களையும், ‘‘பசு பாசம்’’ என்றது இயற்கையாகிய ஆணவத்தையும் குறித்தன. அற-அறுமாறு. ‘‘பசு பாசம்’’ என்னும் ஆறாவதன் தொகை வடநூல் முடிபு. ‘‘சுழி’’ என்பதில் எண்ணும்மை தொகுக்கப்பட்டது. இதனுள், ‘‘அணி, உள்ளத்து’’ என்பன கூன். 220. மா-யானை. ஈண்டு-நெருங்குகின்ற. கொம்பு அன்னார்-பூங்கொம்புபோலும் ஆடல் மகளிர். மதுர வாய் மொழியார்- இனிய இசைப்பாட்டைப் பாடுகின்றவர். அதிர-ஒலிக்க. ‘வார்கழல் அதிர’ என மாற்றி, வீசுதலுக்கு, ‘கால்’என்னும் செயப்படுபொருள் வருவிக்க. ‘‘கூத்தன்’’ என்றது அவனது திருமேனியைக் குறித்த ஆகுபெயர். கச்சு, மேற்கூறப்பட்டமையின், உதரபந்தனம் அதனின் வேறென்க. உதர பந்தனம் - வயிற்றின்மேல் உள்ள கட்டு, கச்சு, அரையில் கட்டப்படுவது. ‘‘கொண்டன’’ என்ற பன்மையால் இது பல |