நெஞ்சைப் பிளந்தன’ என்றாள். நெக்கு வீழ்தரு நெஞ்சு - முன்பே உடைந்து அழிந்த மனம். ‘‘பாய்தல்’’ என்றது, ‘போழ்தல்’ என்னும் பொருட்டாய் நின்றது. நிறை - நெஞ்சினைத் தன்வழி நிறுத்துந்தன்மை. ‘‘இருப்பேனை’’ என்றதை, ‘இருப்பேன்மேல்’ எனத் திரித்து. அதனை, ‘‘படுந்தொறும்’’என்பதனோடு முடிக்க. இவ்வாறு திரியாமலே, ‘‘பக்கம் ஓட்டந்த’’ என்பதனை, ‘அணுகிய’ என்னும் பொருட்டாக்கி, அதனோடு முடித்தலும் ஆம். மூன்றாம் அடியை முதலடியின் பின்னர்க் கூட்டி உரைக்க. பக்கம் ஓட்டந்த-அருகில் ஓட்டந்த - அருகில் ஓடிவந்த, அலந்தேன் - வருந்தினேன். 228. சிவபெருமான், சிலந்தியை அரசாளச் செய்தமையைக் கோச்செங்கட்சோழ நாயனார் புராணத்துக் காண்க. ‘தேவ தேவாகிய ஈசனே’ என்க. தேவ தே - தேவர்க்குத் தேவன். ‘‘தேவ தேவீசனே’’ என்ற இருசீர்களும் வேறுபட வந்தன. ‘‘உலந்த’’ என்பதற்கு, வாழ்நாள் உலந்த’ என உரைக்க. ‘‘உலத்தல் -முடிதல், ‘‘மார்க்கண்டி’’ என்பது, ‘மிருகண்டு முனிவர் மகன்’ என்னும் பொருளது. ஆகி - துணையாகி. ‘‘அக் காலனை, என்னும் சுட்டு, ‘அந்நாளில் வந்த காலனை, எனப் பொருள் தந்தது. செக-அழிக்கக்கருதி, உதைகொண்ட - உதைத்தற் றொழிலை மேற்கொண்ட. ‘உதைகொண்ட பாதங்கள், மலர்ந்த பாதங்கள்’ எனத் தனித்தனி முடியும். ‘பாதங்களால் வந்து’ என மூன்றாவது விரித்து முடிக்க. வனம் - அழகு. |