ஒற்ற-பொருந்த: தழுவுதற்பொருட்டு. ‘என் வனமுலைமேல் ஒற்ற’என்று எடுத்துக்கொண்டு, ‘‘ஈசனே’’ என்றதன்பின் கூட்டி உரைக்க. 229. அருள் செய்து - உயிர்கள்மேல் அருள்பண்ணி; இரண்டாமடியை இறுதிக்கண் கூட்டியுரைக்க மருள்-மயக்கம்; மையல். ‘என்றனை மருள்செய்து’ என மாற்றுக. பொன் பயப்பிப்பது - பொன்போலப் பசக்கச் செய்வது. வழக்காமோ-முறையாகுமோ. நீள் மணி-மிக்க ரத்தினம். செய்யாள்-சிறந்தவள்; உமையம்மை. உருவம் பாகமும் தந்து-உருவத்தைப் பங்காகவும் கொடுத்து. ‘தீயை’ என்பது, ‘தியை’,எனக் குறுகி நின்றது. தீயை நெற்றிக் கண்ணில் வைத்தோன். என்றது, ‘காமனை எரித்தோன்’ என்னும் குறிப்பினது. ‘கங்கையையும், உமையையும் கலந்தாற்போல என்னைக் கலத்தலாவது செய்தல் வேண்டும்; அல்லது என்னை வருத்துகின்ற காமனையாவது எரித்தல் வேண்டும்; இவற்றுள் ஒன்றேனும் செய்யாது என்னைப் பசப்பிப்பது முறையோ’ என்பாள், ‘கங்கையைச் சடைச்சேர்த்திச் செய்யாளுக்குப் பாகமும் தந்து தீயை நுதல் வைத்தோனே’ என்றாள். 230. வைத்த-ஒளித்து வைத்த. ‘‘துதிக்கின்றார்’’ என்றதன்பின் ‘அவ்வாறாக’ என்பது வருவிக்க. ‘துதிக்கின்றான்’ |