னுக்கும் உவமை. திருநீற்றுப் பூச்சினால் இறைவன் திருமேனி வயிரமலைபோல் காணப்படுவதாயிற்று. ‘கவித்தல்’ என்றது, அபயமாகக் காட்டுதலை. 239. தழைப் பீலி-தழைபோன்ற மயில் தோகை. சாதி ஒருவகை மரம்; இதன் காய் சிறந்ததொன்றாகக் கொள்ளப்படுதல் அறிக. கொண்டு-அகப்படக் கொண்டு, உந்தி இழியும்-தள்ளி ஓடுகின்ற. நிவா, ஓர் யாறு. ‘கரைமேல் விளங்கும் தில்லை’ என உரைக்க. ‘தில்லையாகிய தெய்வப்பதி’ என்றவாறு. ‘‘சிந்திப்பரிய’’ என்றது. ‘சிந்தனையுள் அடங்காத பெருமையை உடைய ’ என்றபடி. 240. ‘‘தீ மெய்த் தொழில்’’ என்றதை. ‘மெய்த் தீத்தொழில் என மாற்றி, ‘மெய்த் தொழில், தீத்தொழில்’ எனத் தனித்தனி முடிக்க. மெய்ம்மை - என்றும் ஒழியாமை. தீத்தொழில்-தீயை ஓம்பும் தொழில்; வேள்வி வேட்டல். வாமம்-இடப்பக்கம். ‘எடுத்த எழில் ஆர் வாம பாதம்’ என மாற்றிக் |