பக்கம் எண் :

திருமுறை]26. கோயில்175


265.

எங்களை ஆளுடை ஈசனேயோ !
   இளமுலை முகம்நெக முயங்கி நின்பொற்
பங்கயம் புரைமுக நோக்கி நோக்கிப்
   பனிமதி நிலவதென் மேற்படரச்
செங்கயல் புரைகண்ணி மார்கள் முன்னே
   திருச்சிற்றம் பலமுட னேபு குந்து
அங்குன பணிபல செய்து நாளும்
   அருள்பெறின் அகலிடத் திருக்க லாமே.         (9)
 

266.

அருள் பெறின் அகலிடத் திருக்க லாமென்
   றமரர்கள் தலைவனும் அயனும் மாலும்
இருவரும் அறிவுடை யாரின் மிக்கார்
   ஏத்துகின் றார்இன்னம் எங்கள் கூத்தை
 


இயையும்.     ‘பாய்   புலி,   இரும்  புலி’   என்க;    இரு-பெரிய.
அதள்-தோல்.   ‘‘அதளின்’’  என்பதில்  இன்.  அல்வழிக்கண்  வந்த
சாரியை.  ‘‘அதளின்னுடை’’  என்றதில்  னகர ஒற்று விரித்தல். ‘இவள்
சங்கம்  இழந்தது, உனது உடையையும்,   பாதத்தையும் கண்டே‘ என்க.
ஆவா, இரக்கக் குறிப்பு. ஓகாரமும் அன்னது.  இத்திருப்பாட்டு ஒன்றும்
செவிலி கூற்று. ஏனைய தலைவி கூற்று,

265. நெக - குழைய. முயங்கி-தழுவி. பொற் பங்கயம், இல்பொருள்
உவமை.  நிலவு  -  மதியினது  ஒளி.  அது, பகுதிப் பொருள் விகுதி.
‘‘செங்கயல்   புரைகண்ணிமார்கள்   முன்னே’’   என்றது,   ‘ஏனைய
மகளிரினும்  முற்பட்டு’  என்றவாறு. ‘முன்னே புகுந்து’ என  இயையும்.
உடனே   -  விரைவாக.  ‘நாளும்  செய்து’  என  முன்னே  சென்று
இயையும்.  அகலிடம்,  பூமி,  இருக்கலாம்  -  உயிர் வாழ்தல்  கூடும்.
‘ஈசனேயோ,  முன்னே’  உடனே  புகுந்து,  முயங்கி,  நோக்கிநோக்கி
நாளும்   பணி  பல  செய்து  அருள்பெறின்  இருக்கலாம்;  அல்லது
கூடாது’   எனத்   தனது  ஆற்றாமை  மிகுதி  கூறினாள்.  இதனால்
இவ்வாசிரியரது  பேரன்பு அறியப்படும். ‘‘நிலவு என்மேல் படரப் பணி
பல  செய்து’’  என்றதனால்,  ‘அணுக்கத்  தொண்டுகள்  பல  செய்து’
என்றதாயிற்று.

266, ‘‘மிக்கார்’’ என்றது, ‘மிக்காராய்’ என முற்றெச்சம். ஏத்துதலால்,
அறிவுடையாரின்  மிக்காராயினர்.  ‘‘மிக்கார்’’ என்றதனைப் பெயராக்கி,
அமரர்தம் தலைவன் முதலியோருக்கு