ஆக்கி உரைப்பாரும் உளர். ‘‘கூத்து’’ என்றது. ‘கூத்தனை’ என ஆகுபெயராய் நின்றது. மருள்படு-இறைவற்கு மையல் உண்டாதற்கு ஏதுவான. வினையாட்டியேன்-வினையை உடையளாகியேன். ‘நான் அருள் பெறுதலைக்கருதி என் நெஞ்சம் அலமரும்’ என்க. ‘‘ஆசையை அளவறுத்தார் இங்கு ஆர்’’ என்றது வேற்றுப்பொருள் வைப்பு. ‘எங்கள் கூத்தனை, உமையாள் கணவனை அமரர்கள் தலைவன் முதலாயினோர் (அவன் அருள் பெறமாட்டாது) ஏத்துகின்றாராக, வல்வினை யாட்டியேனாகிய நான் பெற நெஞ்சம் அலமரும் ; ஆதலின், ஆசையை அளவறுத்தார் இங்கு ஆர்’ எனக் கூட்டி முடிக்க. ஆவா, வியப்புக் குறிப்பு. 267,‘‘ஆசையை அளவறுத்தார் இங்கு ஆரே’’ என்பதன் பின், ‘ஆதலின்’ என்னும் சொல்லெச்சம் வருவித்துரைக்க. ‘ஆசையை அளவறுத்தல் இயலாதாகலின் மடவார் பலரும் கலந்தெழுவாராயினர்’ என்றவாறு. ‘நடம் ஆடுவானைக் கலந்து எழும்’ என இயையும். கலந்து - மனத்தாற் கூடி. இனி, ‘‘கலந்து’’ என்றதனை ‘கலக்க’ எனத் திரித்தலும் ஆம். வைகலும் - நாள்தோறும். மாலைப் பூசல் - மாலையைப்பெற, ‘நான் நான்’ என்று செய்யும் பூசல். ‘பூசலை உரைத்த வாசகம்’ என்க. ‘‘கண்டு’’ என்றது, ‘படைத்து’ என்றவாறு. வாசக மலர்கள்-சொற்களாகிய பூக்கள். |