பக்கம் எண் :

திருமுறை]27. கோயில்181


276.

முத்தர் முதுபகலே வந்தென்றன் இல்புகுந்து
பத்தர் பலியிடுக என்றெங்கும் பார்க்கின்றார்
சித்தர் கணம்பயிலும் தில்லைச்சிற் றம்பலவர
கைத்தலங்கள் வீசிநின் றாடுங்கால் நோக்காரே.       (9)
 

277.

நோக்காத தன்மையால் நோக்கிலோம் யாம்என்று
மாற்காழி ஈந்து மலரோனை நிந்தித்துச்
சேக்கா தலித்தேறுந் தில்லைச்சிற் றம்பலவர்
ஊர்க்கேவந் தென்வளைகள் கொள்வாரோ ஒண்ணுதலீர்! (10)
 


276. முத்தர்-இயல்பாகவே பாசங்கள் இல்லாதவர். முதுபகல்-முற்றிய
பகல்;  நண்பகல்.  பத்தர்  பலி  இடுக-அன்பராய்  உள்ளார்  பிச்சை
இடுவார்களாக.  எங்கும்-எனது  உருவம்  முழுதும்.  ‘இல்லில்  வந்து
என்னை  முழுதும் நோக்குதல் பற்றி இவர் நமக்கு அருளுவார் என்று
கருதி  யான்  இவர்  தம்  மன்றிற்குச்  சென்றால், என்னைச் சிறிதும்
கடைக்கணிக்கின்றிலர்’’   என்பாள்.   ‘‘இல்புகுந்து     பார்க்கின்றார்;
ஆடுங்கால்    நோக்கார்’’    என்றாள்.   ‘இஃது  இவர்   வஞ்சகச்
செயல்போலும்’  என்றவாறு. இறைவனது திருவருளைப்பெற விரைவார்
இறைவனை இங்ஙனம் கூறுதல் இயல்பு என்க.

277,     ‘‘மாற்கு ஆழி ஈந்து’’ என்பதை, ‘‘நிந்தித்து‘‘   என்பதன்
பின்னர்க்  கூட்டுக.  நோக்காத  தன்மையால்-நீ எம்மை  முதற்கடவுள்
என்று   மதித்தலைச்  செய்யாத  காரணத்தால்.  யாம்  நோக்கிலோம்
என்று-   நாம்   உன்னை   நம்  அடியவருள்  ஒருவனாகக்  கருதி
இரங்கிலோம்    என்று    சொல்லி.   மலரோன்-பிரமன்.  அவனை
நிந்தித்தமை.    அவனது   நடுத்தலையை   உகிரால்    அறுத்தமை.
‘திருமாலுக்கு  ஆழி  (சக்கரம்) ஈந்ததும், அறக் கடவுளை ஊர்தியாகக்
கொண்டதும் அவர்களது வழிபாட்டினால்’ என்பது பிரமனுக்குக் கூறிய
குறிப்புப் பற்றி வருவித்துக்கொள்ளப்படும். ஊர்க்கே வந்து - ஊரினுள்
தானே வந்து, ‘வழிபடுபவர்க்கு அளியும், வழிபடாதோர்க்குத் தெறலும்
செய்கின்ற  இவர் வழிபாடுடைய என்மாட்டுத் தெறலைச் செய்கின்றது
என்றோ’ என்பதாம்.