பக்கம் எண் :

182புருடோத்தம நம்பி திருவிசைப்பா[ஒன்பதாந்


278.

ஒண்ணுதலி காரணமா உம்பர் தொழுதேத்தும்
கண்ணுதலான் றன்னைப் புருடோத் தமன்சொன்ன
பண்ணுதலைப் பத்தும் பயின்றாடிப் பாடினார்
எண்ணுதலைப் பட்டங் கினிதா இருப்பாரே.          (11)
 

திருச்சிற்றம்பலம் 


278.   ஒண்ணுதலி. இதனுள்கூற்று நிகழ்த்திய தலைவி. ‘காரணமாச்
சொன்ன’   என   இயையும்.   ‘பண்ணு   பத்து’   என   இயைத்து
வினைத்தொகையாக்குக.    பண்ணுதல்-யாழைப்   பண்ணுக்கு   ஏற்ப
அமைத்தல்.  ‘அங்ஙனம் அமைத்துப் பாடுதற்குரிய பத்துப்  பாடல்கள்’
என்றவாறு. தலைப் பத்து-தலையாய பத்துப் பாடல்கள்.  பயின்று-கற்று.
எண்ணுதலைப்   பட்டு-யாவராலும்  மதிக்கப்   படுதலைப்  பொருந்தி.
அங்கு-சிவலோகத்தில். 


மொழியும் மொழியும் பரிசொன் றிலதா
   முன்னான் மறையோ தமுழங் கியகான்
வழியும் வழியும் மதுவார் புதுவீ
   வாசந் தகவீ சியவார் குவளைக்
கழியுங் கழியும் படிவந் தலர்பொற்
   கமலங் கண்மலங் களையுங் கய நீர்
பொழியும் விழியும் மனமுங் குளிரப்
   புதுமா முனிகண் டுபுகழ்ந் தனனே.             (11) 

சீரார் தருபொய் கைவணங் கியதன்
   றென்பான் மிகுமன் பொடுசேர் சரியே
பேரா வகைசெல் லவொரா லநிழற்
   பிரியா தபிரா னெதிர்நேர் படமுற்
பாரா ரவிழுந் துமெழுந் தும்விழிப்
   பயின்மா ரிபொழிந் துமழிந் துமொழிந்
தாரா வமுதே யெனையா ளுடையா
   யறிவே யெனவோ தினனா ரணமே.            (12)

                              ---கோயிற் புராணம்