என்பது குறிப்பு. நுதல்-மாளிகைகளின் நெற்றி. ‘நுதல் சேணிற்பொலி தில்லை’ என்க. சேண்-ஆகாயம். எய்ப்பு-மெலிவு. இலள்-இல்லாதவள் ஆவள். ‘ஆதலின், உமது காட்சியையேனும் அவளுக்கு வழங்குதல் வேண்டும்’ என்பது குறிப்பெச்சம். 281. ‘‘காரிகைக்கு அருளீர்’’ என்றதை இறுதிக்கண் கூட்டி, ‘‘காரிகைக்கு’’ என்றது. ‘இவட்கு’ எனச் சுட்டளவாய் நின்றதாகலின், ‘‘இவள்’’ என்றதற்கு, ‘‘காரிகை’’ என உரைக்க. ‘கருங்கரி, மால் கரி’ எனத் தனித்தனி இயைக்க. மால்-பெரிய. ‘‘ஈர் உரித்து’’ என்றது, ‘‘ஈர்ந்து உரித்து’’ எனப் பொருள் தந்தது. ‘‘வரிப்புனை பந்து’’ என்றாற் போல (முருகு-568). சீர் இயல்-தன் புகழ் எங்கும் பரவிய. வேரி-தேன். ‘குழலாளாகிய இவள்’ என்க. ‘‘சீரியல் தில்லையாய்’’ என்றது தலைவி கூற்றாய் வேறு முடிதலின், பால் வழுவாகாமை உணர்க. 282. வெய்து உயிர்த்து-மூச்சு வெப்பமாக விட்டு. ஆள்-என்னை ஆண்டுகொள். ஏத்தும்-துதிப்பாள். ஒன்று ஆகிலள்-ஒரு திறத்தும் ஆகாள்; ‘ஆற்றுகின்றிலள்’ என்றபடி. இதனை முற்றெச்சமாக்கி, ‘‘அயர்வுறும்’’ என்பதனோடு முடிக்க. செம்மலோர்-தலைமை உடையோர்; அந்தணர். பயில்-வாழ்கின்ற. அம் அல் ஓதி-அழகிய இருள்போலும் கூந்தலை உடைய மகள். இதனை முதற்கண்கூட்டுக. அயர்வுறும்- சோர்வாள். |