பக்கம் எண் :

திருமுறை]28. கோயில்185


283.

அயர்வுற் றஞ்சலி கூப்பிஅந் தோஎனை
உயஉன் கொன்றையந் தார்அரு ளாய்எனும்;
செயலுற் றார்மதில் தில்லையு ளீர்இவண்
மயலுற் றாள்என்றன் மாதிவளே.                    (5)
 

284.

மாதொர் கூறன்வண் டார்கொன்றை மார்பனென்
றோதில் உய்வன்ஒண் பைங்கிளி யேஎனும்;
சேதித் தீச்சிரம் நான்முக னைத்தில்லை
வாதித் தீர்என்ம டக்கொடியையே                  (6)
 

285.

கொடியைக் கோமளச் சாதியைக் கொம்பிளம்
பிடியை என்செய்திட் டீர்பகைத் தார்புரம்
இடியச் செஞ்சிலை கால்வளைத் தீர்என்று
முடியும் நீர்செய்த மூச்சறவே.                      (7)
 


283.   பின்னிரண்டடிகளை முதலில் வைத்து, ‘‘உற்றாள்’ என்றதை
முற்றெச்சமாகக்  கொண்டு  உரைக்க. உய-உய்ய. இதன்பின், ‘கொள்ள’
என   ஒரு   சொல்  வருவிக்க.  செயல்  உற்று  ஆர்-வேலைப்பாடு
அமைந்து   நிறைந்த.   இவண்-இப்பொழுது.  மயல்-பித்து.  ‘இவட்கு
அருள்’ என்னும் குறிப்பெச்சம் இறுதியில் வருவித்து முடிக்க.

284.     ‘ஒண் பைங்கிளியே, மாதொர் கூறன், கொன்றை மார்பன்
என்றாற்போலத்   தில்லையானது   பேச்சினை  நீ  பேசினால்  நான்
உய்வேன்;  (இல்லாவிடில்  உய்யமாட்டேன்) என்று கிளியிடம் சென்று
வேண்டுவாள்’ என்க. வண்டு ஆர்-வண்டுகள் ஆர்க்கின்ற (ஒலிக்கின்ற)
;  ‘நிறைந்த’  என்றலுமாம்.  ‘நான்  முகனைச்  சிரம் சேதித்தீர்’ என
மாற்றுக.  சேதித்தீர்-அறுத்தவரே. ‘சிரம் சேதித்தீர்’ என்றது. ‘ஒறுத்தீர்’
என்னும்   பொருட்டாய்.   ‘நான்முகனை’  என்னும்  இரண்டாவதற்கு
முடிபாயிற்று.     ‘தில்லைக்கண்     நின்று     வாதித்தீர்’   என்க.
வாதித்தீர்-வருந்தப் பண்ணினீர். ‘இது தகுமோ’ என்பது குறிப்பெச்சம்.
இத்திருப்பாட்டின் ஈற்றடி இறுதிச்சீர் வேறுபட்டு வந்தது.

285.  ‘‘பகைத்தார் புரம்.. .. .. .. கால்வளைத்தீர்’‘ என்பதை முதலிற்
கொள்க.     கொடி-பூங்கொடிபோன்றவள்.     கோமளச்சாதி-அழகிய
செண்பகப்    பூப்போன்றவள்.   கொம்பு-பூங்கொம்பு    போன்றவள்.
‘கொம்பினை’ என இங்கும் இரண்டாவது