விரிக்க. இளம் பிடி-இளமையான பெண்யானை போன்றவள். இவையெல்லாம் தலைவியையே குறித்து வந்த பலபெயர்கள். இடிய-அழியும்படி. செஞ்சிலை-நிமிர்ந்து நின்ற வில்லை. கால் வளைத்தீர்-இரண்டு காலும் அணுக வருமாறு வளைத்தவரே. ‘பகைத்தார் புரம் இடியச் செய்தது பொருந்தும்; காதலித்தாளை இடியச் செய்தல் பொருந்துமோ’ என்பது குறிப்பு. ‘நீர் செய்த மூச்சறவு என்று முடியும்’ என மாற்றுக. மூச்சறவு-இறந்துபாடு; இஃது அதற்கு ஏதுவாய வருத்தத்தைக் குறித்து நின்றது. என்று முடியும்-எந்நாள் நீங்கும். ‘நீங்குதல் இன்றி. இறந்துபாட்டினைச் செய்தேவிடும்போலும்’ என்பது குறிப்பெச்சம். 286. அறவன் - அற வடிவினன். மறவன்-வேடன். ‘‘அறவன்,மறவன்’’ என்பன, ‘தன்னை அடைந்தாரை இடுக்கண் நீக்கிக் காப்பவன்’ என்னும் குறிப்புணர்த்தி நின்றன. வாதை-துன்பம். பிறை குலாம் நுதல்-பிறை விளங்குவது போலும் நெற்றியையுடைய. பெய் வளை-இடப்பட்ட வளையினை உடையவள். ‘இவள் எப்பொழுதும் உம்மையே நினைந்து முறையிடுகின்றாள்; இவளது வருத்தத்தைப் போக்கீர்’ என்பது கருத்து. 287. அருக்கன்-சூரியன். சூரியனைப் பல் இறுத்தது தக்கன் வேள்வியில். ‘‘இறுத்து, கொன்று’’ என்ற எச்சங்கள் எண்ணின்கண் வந்தன. கோள்-உயிரைக் கொள்ளுதல்; கொலை. இழைத்தீர்-செய்தவரே. எனும்-என்று சொல்லுவாள். ‘இவள் உம்பொருட்டு ஒன்றும் ஆகிலள்’ என்க. உம்பொருட்டு-உம்மை அடையவேண்டி. ஒன்றும் ஆகிலள்-ஒருபொருளும் ஆகாது அழிந்தொழிகின்றாள். ‘இவளைக் |