பக்கம் எண் :

திருமுறை]28. கோயில்187


288.

ஏயு மாறெழிற் சேதிபர் கோன்தில்லை
நாய னாரை நயந்துரை செய்தன
தூய வாறுரைப் பார்துறக் கத்திடை
ஆய இன்பம் எய்தி யிருப்பரே.                   (10)
 

திருச்சிற்றம்பலம்

திருவிசைப்பா முற்றும். 
 


கடைக்கணித்தல்      வேண்டும்’ என்பது குறிப்பெச்சம்.  இதனுள்
முன்னைத்   திருப்பாட்டில்  ‘அன்று  பன்றிப்பின்  ஏகிய’   என்னும்
பொருளைத்  தொடர்ந்து,  ‘அன்று அருக்கனைப் பல் இறுத்து, என்று
வந்த பொருள் அளவே அந்தாதிபோலும் !

288. ஏயுமாறு-பொருந்தும்     வகையில். ‘சேதிபர்கோன்  தில்லை
நாயனாரை     ‘ஏயுமாறு     உரைசெய்தன’     எனக்     கூட்டுக.
சேதிபர்-சேதிநாட்டவர்.  சேதியர்’ எனப் பாடங்கொள்ளுதல்  சிறக்கும்.
கோன்-அரசன்.  ‘‘சேதிபர் கோன்’’ என்றதனால் ‘சேதிராயர்’  என்னும்
பெயர்க்  காரணம்  விளங்கும். நயந்து-விரும்பி.  உரைசெய்தன-பாடிய
பாடல்கள்.    தூயவாறு-எழுத்துப்பிழை    முதலியன   இல்லாதவாறு.
‘‘துறக்கம்’’    என்றது    இங்கு.    ‘உடலைத்    துறந்து   சென்று
அடையப்படுவது’ எனக் காரணப்பெயராய்ச் சிவலோகத்தைக் குறித்தது.
ஆய  இன்பம்-அடையத்  தக்கதாய  இன்பம்;  சிவானந்தம்.   ஏனை
இன்பங்கள்   அன்னதாகாமை   அறிக.   இத்திருப்பாடலின்   ஈற்றடி
ஈற்றயற்சீர் வேறுபட்டு வந்தது.