பக்கம் எண் :

திருமுறை]29. கோயில்189


அன்ன நடைமட வாள்உமை கோன்அடி
   யோமுக் கருள்புரிந்து
பின்னைப் பிறவி யறுக்க நெறிதந்த பித்தற்குப்
   பல்லாண்டு கூறுதுமே.                         (1)
 

290.

மிண்டு மனத்தவர் போமின்கள்;
   மெய்யடியார்கள் விரைந்து வம்மின்;
கொண்டும் கொடுத்தும் குடிகுடி யீசற்காட்
   செய்மின் குழாம்புகுந்
 


உறவாயபத்தர்கள்’     என உயர்திணை   முறைக்கிழமைப்பொருட்டு.
பத்தர்கள்-அடியார்கள்.  வஞ்சகர்-அடிமை  செய்ய ஒருப்படாதவர்கள்.
‘‘போய்  அகல’’ என்றது ஒருபொருட் பன்மொழியாய், ‘இல்லாதொழிய’
எனப்  பொருள்  தந்தது.  ‘அகலப்புகுந்து’  என  இயையும். எனவே,
வஞ்சகர்க்குத்   திருமன்றத்தைச்  சேர்தல்  வாயாமை  பெறப்பட்டது.
‘பொன்னின்  மண்டபம், செய்மண்டபம்’ எனத் தனித்  தனி இயைக்க.
பொன்னின்   மண்டபம்-பொன்னால்   இயன்ற  மண்டபம்;  என்றது,
கூத்தப்    பெருமானது   திருச்சபையை.   இன்,   சாரியை.   செய்
மண்டபம்-சிறப்பாகச்   செய்யப்பட்ட   மண்டபம்.    புவனி-புவனம்;
உலகம்.  விளங்க-நிலைபெறுமாறு.  ‘விளங்க  நின்று’ என ஒரு சொல்
வருவிக்க.    அடியோமுக்கு-அடியேங்கட்கு;    என்றது.   அடியவர்
அனைவரையும் உளப்படுத்து. ‘அடியோமுக்கு அருள் புரிந்து’ என்றது.
‘திருக்கூத்தியற்றி’  என்றவாறு.  பின்னைப்  பிறவி-மேல்வரும்  பிறவி.
அறுக்க-நாங்கள்  அறுத்துக்  கொள்ளும்படி.  நெறி-அதற்குரிய  வழி;
என்றது.   திருவடி   ஞானத்தை.  ‘‘தந்த  பித்தற்கு’’  எனச்  சுருங்க
ஓதினாராயினும், தந்தான்; அப்பித்தற்கு என இருதொடராக  உரைத்தல்
கருத்தென்க.    பல்லாண்டு-பல்லாண்டு   வாழ்க   என   வாழ்த்தும்
வாழ்த்தினை.  ‘உமைகோன், மண்டபத்துள்ளே புகுந்து விளங்க நின்று
அருள்புரிந்து   நெறிதந்தான்;  அவனைப்  பல்லாண்டு  வாழ்க  என
வாழ்த்துவோமாக’  என்பது  இதன்  திரண்ட பொருள். இதன்  ஈற்றடி
ஒருசீர் மிக்கு வந்தது.

290.     மிண்டு   மனம்-திணிந்த   மனம்;   உருகாத    மனம்.
‘மனத்தவராயினார்,    அடியார்களாயினார்’    என   இரண்டிடத்தும்
ஆக்கச்சொல்  வருவிக்க.  ‘‘போமின்கள்’’  என்றது,  அவர் இசையார்
என்பதுபற்றி,  ‘‘ஈசற்கு’’  எனப்  பின்னர்  வருகின்றமையின்,  வாளா,
‘‘கொண்டும் கொடுத்தும்’’ என்றார். ஈசன்