பிறந்தோர் யாவரும் சிவபெருமானுக்கு வழிவழித் தொண்டராய பழவடியாராதலின், அவரோடு கூடிப் பல்லாண்டு கூறுதலைச் சிறப்புடையதாக அருளிச்செய்தார். இவ்வாற்றால் தில்லைவாழந்தணர்போலத் திருவாரூர்ப் பிறந்தாரும் இயல்பாற் சிறந்தவராதல் பற்றியே ஆளுடைய நம்பிகள், ‘‘தில்லைவா ழந்தணர்தம் அடியார்க்கும் அடியேன்’’ என்றாற்போல, ‘‘திருவாரூர்ப் பிறந்தார்கள் எல்லார்க்கும் அடியேன்’’ என்று அருளிச்செய்தார் மழவிடையாற்கு வழிவழி ஆளாய் மணம்செய் குடி-மரபு இரண்டும் சைவ நெறி வழிவந்த கேண்மையராய் (பெ.பு-ஞானசம்-17.) உள்ளவரே தம்முள் மணம் செய்துகொள்ளும் குடிகள். ‘அவற்றிற் பிறந்த பழவடியார்’ என்க. 300. ‘யார் யார்’ என்பது, ‘‘ஆர் ஆர்’’ என மருவி நின்றது. திருவாதிரை நாள் தில்லைப் பெருமானுக்குத் தனிப் பெருந் திருநாளாதலின், அதனையே எடுத்துக்கூறினார். இத் திருப்பதிகம் அந்நாளில் இவரது அன்பினை வெளிப்படுத்துதற் பொருட்டு ஓடாது நின்ற தேரினை இத்திருப்பதிகம் பாடி ஓடச்செய்தார் என்பது மரபு. தில்லைத் தேர்த் திருவிழா இஞ்ஞான்று திருவாதிரைக்கு முன்னாளில் செய்யப்படுகின்றது. அணி-அழகு. ‘ஆதிரை நாளில் அமரர் குழாத்தில் ஆரார் வந்தார்’ என்க. ‘வந்தார்’’ என்றதன்பின், ‘எனின்’ என்னும் சொல்லெச்சம் வருவிக்க. இனி அவ்வாறு வருவியாது. கூற்றும், மாற்றமுமாக நின்றாங்கு நிற்ப உரைப்பினும் ஆம். ‘இந்திர |