பக்கம் எண் :



சிவமயம்

திருவிசைப்பா

அருளிச்செய்த

ஒன்பது நாயன்மார் திருப்பெயரும் திருப்பதிகவகையும்

பண்ணின் வகையும்.
 

செம்பொன்மணி யம்பலத்து நிருத்த னார்க்குத்
   திருவிசைப்பா உரைத்தவர்தந் திருப்பேர் சொல்லில்
பம்புபுகழ் செறிதிருமா ளிகைமெய்த் தேவர்
   பரிவுடைய சேந்தனார் கருவூர்த் தேவர்
நம்பிகா டவர்கோன்நற் கண்டரா தித்தர்
   நன்குயர்வே ணாட்டடிகள் திருவாலி யமுதர்
அம்புவியோர் புகழ்புருடோத் தமர்சேதி ராயர்
   ஆகவிவ ரொன்பதின்மர் தாமுறைகண் டடைவே.   (1)
 
அடைவுறுமா ளிகைத்தேவர் நான்கு சேந்தர்
   அன்புறுபல் லாண்டொன்றோ டிசைப்பா மூன்று
திடமுடைய கருவூரர் பத்து வீறிற்
   சிறந்தகா டவரிரண்டு கண்டர் வேணாடர்
படிபுகழொவ் வொன்றுதிரு வாலி நான்கு
   பன்னுபுரு டோத்தமனா ரிரண்டுசே திராய
ருடையதிருக் கடைக்காப்பொன் றாகவிரு பத்தொன்
   பானோது செய்யுள்முந்நூற் றறுபதினோ டைந்தே.  (2)
 
ஐந்துடன்நால் வருமுரைத்த திருக்கடைக்காப் பிற்பண்
   அறையின்மா ளிகைத்தேவர் நான்கிலொன்று காந்தார
முந்துகரு வூரர்பத்தி னிரண்டுபுற நீர்மை
   மொழிந்திடுகாந் தாரமொன்று காடவர்கோ னிரண்டின்
நந்தலில்சா ளரபாணி யொன்றுவேணாட் டடிகள்
   நவின் றதொன்று புறநீர்மை திருவாலி யமுதர்
பந்தமறச் சொன்னான்கி னொன்றுநட்ட ராகம்
   பகர்ந்திடினொன் றிந்தளமற் றெவையும்பஞ் சமமே.
                                            (3)

*****