11. 12. 13. 14. 15. 16. 17.
18. 19. 20. 21. 22.
23. | தலங்கள் தோறும் திருப்பதிகங்கள் உரையுடன் வெளியிடுவது. சமய நுணுக்கங்களைத் தெளிவுற அச்சிட்டு வழங்குவது. நூல் ஆராய்ச்சிகள் எழுதுவித்து வழங்குவது. விஞ்ஞான மெய்ஞ்ஞான நூல்களை வெளியிட்டு வழங்குவது. சமய நூல்களைத் தக்க முறையில் வெளியிடுவது. தமிழ்நாட்டுத் தல வரலாறுகளை எழுதுவித்து வழங்குவது. திருமுறைகளையும், மெய்கண்டசாத்திரங்களையும் பண்டார சாத்திரங்களையும் கல்வெட்டின் வழியாக ஆங்காங்கு நிலைபெறச்செய்தல். திருமுறைகளை உரையுடன் வெளியிடுவது. அறிஞரைக்கொண்டு ஆலயம்தோறும் அறிவுரை வழங்குவது. பிரசார வாகனத்தின் மூலம் தமிழ்நாடெங்கும் சமயம் வளர்ப்பது. இடங்கள்தோறும் திருநெறிய தெய்வத் தமிழ் மாநாட்டை நடத்திவருவது. ஸ்ரீலஸ்ரீ குருஞானசம்பந்தசுவாமிகள் திருவிழாவில் எல்லாச் சமயத் தத்துவங்களையும் எல்லோரும் எளிதில் உணரச் சமய மாநாடு (Religious Congress) நடத்துவது. சேரிகளிலும், கிராமங்களிலும் சமயப்பிரசாரம் ( Intensive Programme) செய்வது. |