24. 25.
26.
27. 28. 29.
30. 31.
32.
33. 34.
35. 36. 37. | சென்னையில் சமயப் பிரசாரநிலையம் நிறுவி, பிரசாரப்பணி செய்துவருதல். சென்னை சமயப் பிரசார நிலையத்தில் வித்துவான் வகுப்பு நிறுவிப் பாடங்களைக் கற்பித்தல். ‘‘ஞானசம்பந்தம்’’ என்னும் மாதப் பத்திரிகை வாயிலாகச் சமய உண்மைகளை அறிவுறுத்துவது. சமயக் கூட்டங்களுக்குத் தக்கன செய்வது. தமிழ்ப்பணி சமயப்பணி செய்பவர்க்கு உதவுவது. உலகத் துன்பங்கள் வந்தபோது துன்பநீக்கப் பிரார்த்தனைகள் உலக நன்மைக்காகச் செய்தல். ஆங்கிலக் கலாசாலையில் தமிழ்ப் பரிசு அளிப்பது. சமயாசாரியர்கள் திருவிழாக்களைக் கொண்டாடும் வாயிலாகச் சமயப்பற்று வளர்த்தல். அடியார்கள் தோன்றிய ஊர்களிலும், வழிபட்ட கோயில்களிலும், அவர்கள் திருவுருவத்தை நிறுவி வழிபாடு செய்வித்தல். ஆலயத் திருப்பணி, மகாகும்பாபிஷேகங்கள் முதலியன நடத்திவருதல். லக்ஷார்ச்சனை கோடியர்ச்சனை முதலியன நடத்தி சமயவுணர்வை வளர்த்தல். அறுபத்துமூவர் திருவிழாக் கொண்டாடுதல். பொருளும் புத்தகமும் அளித்து ஏழை மாணவர்களுக்கு உதவுவது. அனாதைச் சிறுவர்களுக்கு விடுதி அமைத்துப் பாதுகாத்து வருதல். |