66


இவர்   பாடியருளிய   திருவிசைப்பாப்   பதிகங்கள்  ஒன்றேயாகும்.
இப்பதிகம் கோயில் என்னும் சிதம்பரத்தைப்பற்றியது.

காலம்:-

இவர்      முதற்குலோத்துங்கன்  கி.பி. 1070 - 1120   காலத்தவராக
அல்லது     பிற்பட்ட     காலத்தவராக      இருக்கலாம்     என்று
ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர்.

திருவிசைப்பா ஆசிரியர்களின்

துதி    

நின்மலனின் அருளாலே நீத்துலக வாழ்க்கையினைச்
சொன்மயனைச் சிவனவனைத் துதித்தினிய சொலினால்எம்
புன்மையினைப் போக்கியமா ளிகைத்தேவன் முதற்புலவர்
நன்மலர்த்தாள் இணைபணிந்து மனத்தகத்து நாட்டுவமே.
                                -அருணகிரி புராணம்.

செந்தமிழார் மாளிகைத்தே வன்முதலார் சேவடியும்
வந்தனைசெய் துய்ந்தேம் மகிழ்ந்து.
                                -பரமத திமிர பானு.