79


அமையலாகின்றது.     இங்குக்  காணும்   காட்சி,    கவிதைக் காட்சி,
பேராசிரியர்   தெ   பொ,  மீனாட்சிசுந்தரனார்   அவர்கள்  நக்கீரரை
யொட்டிக்    கூறுவதுபோன்று.   ‘‘உலகிற்கும்    உலக   வாழ்விற்கும்
இடைப்பட்ட   நம்மையெல்லாம்,   அவை  கடந்த    அப்பாலைக்கும்
அப்பாலைக்கு,-புராண  இதிகாசங்களாற் கூறப்பட்ட   ஒருமைப்பாட்டின்
உயர்   நிலைக்கு,   ‘ஈர்த்துச்சென்று  அப்பரம்பொருள்    இன்பத்தில்
திளைக்கச்செய்யும்’’ திருக்காட்சியாக உள்ளது என்று கூறலாம். 1

இறைவனை  நினைந்து, மனம் கனிய, அழுது உருக, கருவூர்த்தேவர்
கூறுவதுபோன்று ‘அழுவது நின்திறம் நினைந்தே அதுவன்றோ  பெறும்
பேறு’2  என்று இறுமாக்கத் திருவிசைப்பாக் கவிதைகள்   துணைபுரியும்
என்பது  உறுதி. அவ்வுறுதி சமய உலகில் நிலைக்கவேண்டும்  என்பதே
அறிஞர் கருத்துரை எல்லாம்.


1.  'A  Seminar  on  saints’-[1960]  Edited  by  Dr.  T.M.P.
      Mahadevan-P.35  

2. திருவிசைப்பா-127.