78


துள்ள  ஒரு  பதிகம்      பாடியுள்ளார்.1  இப்   பண்முறை  பெரிதும்
ஆராய்ந்து உணரத்தக்கது.

கணம்புல்லர்,2   கண்ணப்பர்,3 நாவுக்கரசர்,4 சம்பந்தர்,5 சேரமான்,6
ஆரூரர்,7   ஆகிய   நாயன்மார்   திருப்பெயர்களை    எடுத்துக்கூறி
இன்புறுத்துகின்றார் நம்பிகள். திருக்கடைக்காப்பில்,

‘‘பூந்துருத்திக் காடன் தமிழ்மாலை
பத்தும், கருத்தறிந்து பாடும் இவை’’

என்று குறிக்கின்றார்.

கண்டராதித்தர்     சிவஞான   கண்டராதித்தர்   ஆதலின்   தம்
பாடல்களில்    சிவஞானத்தெளிவையே   வடித்து     வழங்கியுள்ளார்.
வேணாட்டடிகள் வாக்கில் ‘பேழ்கணித்தல்’ என்ற தொடர் வருகின்றது.9
இது ‘பிழைகணித்தல்’ என்பதன் மரூஉவே  என்று  கூறுவதும்  உண்டு.
திருவாலியமுதனார் பாடும் ஒரு பதிகம் பாதாதிகேசமாக  இறைவனைப்
புகழ்ந்துபோற்றும் பாங்குடையது,10

கவிதைத் திருக்காட்சி:

திருவிசைப்பாக்  கவிதைகள் முழுதும் பொதுநோக்கிற் பார்க்குங்கால்
அருட்சித்தர்களாகவிளங்கிய   அருளாளர்களது  அநுபவப்   பிழிவாக
உள்ளன   எனலாம்.  அவை  சொற்பொருட்  காட்சியால்   விளக்கும்
கருத்தினும்,    அவற்றைக்    கடந்த   மெய்ப்பொருட்    காட்சியால்
விளக்குவது எழுத்தில் எழுதிக்காட்டொணா ஒன்று என்று


1. திருவிசைப்பா -பதி.19  

2. திருவிசைப்பா பா. 2  

3. திருவிசைப்பா 2  

4. திருவிசைப்பா 3  

5. திருவிசைப்பா 4  

6.7. திருவிசைப்பா 5  

8. திருவிசைப்பா 10  

9. திருவிசைப்பா பதி.21.-பா.3  

10. திருவிசைப்பா பதி.22