தம் பொன்னடிக் கமலம் பொடி யணிந்து (தொண்டரடிப்பொடி) அடிமை பூண்டவர்.1 திருவாவடுதுறைப்பதிகம் அகப்பொருள் நோக்குடையது. திருவிடைக்கழியும் இவ்வாறே,2 (முருகப் பெருமானை வழிபடுவது இப்பதிகம்) சுப்பிரமணியன்,3 என்ற பெயர் இவர் திருமுறைப்பாட்டிற் காணப்பெறும். குராநிழற்கீழ்நின்ற பெருமானை மனமுருகப் பணிந்து எழுகின்றார் சேந்தனார். திருவீழிமிழலையில் படிக்காசு பெற்ற நிகழ்ச்சி இவர் திருவுள்ளத்தை உருக்குகின்றது. திருஞான சம்பந்தரையும், திருநாவுக்கரசரையும் ‘எம் பெரு மக்கள்’ என்று பெருமிதத்துடன் போற்றி, அவர்கள் நெஞ்சில் நிறைந்து நின்ற அருளிப்பாட்டின் அருமையைக் கனிந்து பாடுகின்றார்; இருவர் தேவாரப் பாக்களைப் ‘பழுத்த செந்தமிழ் மலர்’ என்று புகழ்கின்றார்:4 ‘பாடலங்காரப் பரிசில் காசருளிப் பழுத்த செந் தமிழ்மலர்சூடி நீடலங்காரத் தெம்பெருமக்கள் நெஞ்சினுள் நிறைந்து நின்றானை’ ஏனைய அருளாசிரியர்கள்: பூந்துருத்தி நம்பிகாடநம்பி திருவாரூரையும் கோயிலையும் போற்றியும், கண்டராதித்தர் கோயிலைப் போற்றியும், வேணாட்டடிகள் கோயிலைப் போற்றியும், திருவாலியமுதனார் கோயிலைப் போற்றியும், புருடோத்தம நம்பிகள் கோயிலைப் போற்றியும், சேதிராயர் கோயிலைப் போற்றியும் பாடியருளிய பதிகங்கள் திருவிசைப்பாத் தொகுப்பில் இடம்பெற்றுள்ளன. தில்லையைப் போற்றித் திருவிசைப்பா அருளாளர்கள் பெரும்பான்மையான பதிகங்கள் பாடியுள்ளனர். 16 பதிகங்கள் கோயிலைப்பற்றி அமைந்தனவே யாம். பூந்துருத்திநம்பி காடநம்பி, தேவாரத் திருமுறைகளிற் காணப்பெறாத ‘சாளரபாணி’ என்ற பண் வகையில் அமைந்
1. திருவிசைப்பா திருவீழிமிழலை 6 2. திருவிசைப்பா திருவிடைக்கழி. 3. திருவிசைப்பா திருவிடைக்கழி 3 4. திருவிசைப்பா திருவீழிமிழலை - 12. |