‘‘அன்புசெய்யா, அரட்டரை யரட்டும் பேசும் அழுக்கரைக் கழுக்களாய பிரட்டரை’’1 ‘‘கல்லாச் சிணுக்கரைச் செத்தற் கொத்தைச் சிதம்பரைச் சீத்தை யூத்தைப் பிணுக்கரை’’2 ‘‘நணுகா நாய்கள், அசிக்க ஆரியங்கள் ஓதும் ஆதரைப், பேதவாதப் பிசுக்கரை’‘3 ‘‘திருவிலா உருவினாரைச் சாடரைச் சாட்கை மோடச் சழக்கரைப் பிழக்கப் பிட்கப் பேடரை’’4 ‘‘அருக்கரை, அள்ளல்வாய கள்ளரை, அவியாப்பாவப் பெண்ணரை’’5 என்றெல்லாம் பழித்துக், ‘காணா கண்; வாய் பேசாது அப்பேய்களோடே’ என்று பாடல்தோறும் ஈற்றுத் தொடர் தந்து பாடுகின்றார் தேவர். சேந்தனார்: சேந்தனாரது இசைப்பாக்கள் திருவீழிமிழலை, திருவாவடுதுறை, திருவிடைக்கழி ஆகிய மூன்று தலங்களைப் பற்றியவை. கோயில் பற்றிய திருப்பல்லாண்டுப் பதிகமும் இவ்வருளாளர் பாடியதே. மிகக் கனிவும், அன்புவளமும் பெருகிய திருப்பாட்டுக்கள். இறைவனைக் கண்டு கண்டு உள்ளம் குளிரக் கண்குளிர்கின்ற இவர்,2 அவன் பொன்னடிக்கடிமை புக்கு. இனிப் போகவிடுவனோ பூண்டு கொண்டேன் என்று உறுதிகொண்ட உளத்தினர்;4 இறைவன் திருவடி நீழற்கீழ்ப் புக்குநிற்பவர்
1. திருவிசைப்பா --3 2. திருவிசைப்பா --4 3. திருவிசைப்பா 5 4. திருவிசைப்பா திருவீழிமிழலை-2 பா 5. திருவிசைப்பா திருவீழிமிழலை-2 4 |