75


இவ்வாறே இறைவன் திருவடிப் பேறு வேண்டுகின்றார்:  

மலர்ச்சேவடிகள் என்மனத்து வைத்தருளே’1

பெரும்பற்றப்புலியூர்    பற்றிய  இயற்கை  வருணனை  முதல் இரண்டு
வரிகளிற் பேசப்பெறுகின்றன.

உருவளர் இன்பச் சிலம்பொலி யலம்பும்
   உன்னடிக் கீழதென் னுயிரே’

எனவரும்     பகுதி,    ‘அடிநிழற் கீழதென்றோ வென்றன் ஆருயிரே’
என்று   வரும்  அப்பர்   ஆருயிர்த்   திருவிருத்தத்தோடு  ஒப்பிட்டு
உணரத்தக்கது.2

தலைவி    கூற்றை   எடுத்துரைப்பதாக    வருகின்றது    அடுத்த
திருப்பதிகம்.3

‘‘திருநீறிடா வுருத் தீண்டேன் என்னும்
   திருநீறு மெய்த்திரு முண்டத்திட்டுப்
பெருநீலகண்டன் திறங்கொண்டு இவன்
   பிதற்றிப் பெருந்தெருவே திரியும்’’

என்று    வரும்     இப்பதிகப்   பாடல்    பொருணயமிக்குச்  சுடர்
விடுகின்றது.4

இறைவன்  திருவருளைக்  கூறிப்புகழாத  மக்களைக்   கடுமையாகத்
தாக்குகின்றது அடுத்த பதிகம்,

‘‘வீறிற், கோறைவாய்ப் பீறற் பிண்டப்
பிணங்கள்’’
5

‘‘துட்டரைத் தூர்த்த வார்த்தைத் தொழும்பரைப்
பிழம்பு பேசும்
பிட்டரை’’
6


1. திருவிசைப்பா-2; பா-1.  

2. திருவிசைப்பா-2; பா-2.  

3. திருவிசைப்பா-2; பா-3.  

4. திருவிசைப்பா-2; பதி.3; பா-10  

5. திருவிசைப்பா-2; -பதி.4 -1  

6. திருவிசைப்பா-2; - 2