| 231. | கடிமலர்க் கொன்றை தரினும்புல் லேன்கலை சாரலொட்டேன் முடிமலர் தீண்டின் முனிவன்; முலைதொடு மேற்கெடுவன்; அடிமலர் வானவர் ஏத்தநின் றாய்க்(கு)அழ கல்லவென்பேன்; தொடிமலர்த் தோள்தொடு மேல்திரு வாணை தொடங்குவனே. | | 63 |
| 232. | தொடங்கிய வாழ்க்கையை வாளா துறப்பர் துறந்தவரே, அடங்கிய வேட்கை அரன்பால் இலர்அறு காற்பறவை |
231.பொழிப்புரை: (நாளை இங்கு வருகின்ற சிவபெருமான் என்னைத் துறவாமைக்கு அடையாளமாகத் தனது) வாசனை பொருந்திய கொன்றை மலர்களால் ஆன மாலையை வலிய எனக்குத் தந்தானாயினும் யான் உடல் பொருந்தத் தழுவ மாட்டேன்; எனது உடையை அவன் பற்றவரின் நெருங்க விட மாட்டேன்; என் கூந்தலின் முடிக்கப்பட்டுள்ள மலரைத் தொடும் முறையால் என்னைத் தொட முயல்வானாயின், வெகுண்டு விலக்குவேன், 'கொங்கையை அவன் தொட்டு விட்டால் நான் இறந்து விடுவேன்' (என்பது தோன்றப் புறங்காட்டி நிற்பேன்) பிற குறும்புகளும் செய்வானாயின் 'தேவர் பலரும் உனது திருவடிகளை வணங்க இருக்கின்ற உனக்கு இவை யெல்லாம் அழகல்ல' என அறிவுரை கூறுவேன், அவைகளையும் கடந்து அவன், வளையும், மாலையும் பொருந்திய எனது தோள்களை வலாற்காரமாகப் புல்ல வருவானாயின் அவன்மீதே ஆணை வைக்க முயலுவேன். குறிப்புரை: 'ஆகலான் நீ கவலற்க' என்பது குறிப்பெச்சம். இது வரைவுகடாவ எண்ணிய தோழியைத் தலைவி உடன் பட்டுக் கூறியது. 'தலைவன் வரைவு நீட்டிப்பின் இருமுது குரவர் பிறர் வரைவுக்கு உடன்படுதல் முதலியன நேரத் தலைவி இறந்துபடுவாள்' எனத் தோழி கவன்று, தலைவனை வரைவு கடாதற்கு விரைதல் இயல்பு. அவ்வழித் தலைவி புணர்ச்சி மறுப்பாள் என்க. அதிதீவிர பக்குவிகள் சத்தியோ நிர்வாணதையை விரும்பி வேண்டுதல் இதன் உள்ளுறை. முனிதல் அதன் காரியம் தோற்றி நின்றது. 'தான் இறந்து படின் அவனும் படுவான்' எனத் தலைவி அஞ்சுவள் ஆதலின், "கெடுவேன்" என்றது, கெடுதலைக் குறிப்பித்தலையேயாம். ஏனையோர்மீது வைக்கும் ஆணைபோலாது சிவன்மீது வைக்கும் ஆணை தலையாயது ஆகலின் "திரு ஆணை" என்றார். ஆணை வைத்து விடின் பின்னர்க் கூட்டம் இன்றாம் ஆகலின், "ஆணை தொடங்குவன்" என்றாள். 232.பொழிப்புரை: (இல்லறத்தார் கிடக்க,) துறவறத்தை மேற்கொண்டவர்களிலே பலர் அந்தத் துறவறத்தைப் பயனில தாகப்
|