வெண்பா | 878. | அன்றென்றும் ஆமென்றும் ஆறு சமயங்கள் ஒன்றொன்றோ டொவ்வா துரைத்தாலும் - என்றும் ஒருதனையே நோக்குவார் உள்ளத் திருக்கும் மருதனையே நோக்கி வரும். | | 17 |
துதிக்கை. ‘கையொடு’ என உருபுவிரிக்க.“பவள மால் வரை பணைக் கையோடு போந்தனைய” - என்பது இல்பொருள் உவமை. தலைவன்; கணபதி, சிவபெருமானுக்கு உள்ளவை விநாயகருக்கும் இருத்தல் பற்றி, “எண்தோள்தலைவன்” என்றார். பதாகை - கொடி. ‘கூர்வேற் குமரன்’என இயையும். ‘அமரரைத் தாங்கும்’ என உருபுவிரிக்க. தாங்குதல், அசுரரால் இன்னற்படா வண்ணம்காத்தல். “தாங்கும்” என்றதை இறந்த காலத்தில்வந்த நிகழ்கால மாகக் கொள்ளலும் பொருந்தும். பொருதல் - மோதுதல். ‘கரையைப் பொருதிடும’ என்க. பொன்னி - காவிரி நதி. அது பல வளங்களையும் தருதலால் புண்ணியங்களைப் புரப்பதாயிற்று. தேவர்ஆ - காமதேனு. ‘அஃது எல்லார்க்கும் எல்லாம் வழங்குதாகலின், அதன் கன்றிற்குக் கிடையாதது ஒன்று இல்லை’ என்பது கருத்து. “யாது” என்பது, ‘எத்தன்மையது’ என்னும் பொருட்டு. வதையா - வதைத்து முறியாப் புழுக்கல் - உடைபடாத அரிசியால் ஆக்கப்பட்ட சோறு. அயினி - உணவு; அது சோற்றைக் குறித்தது. விளாவிய நீர்காய்ச்சப் படாத நீரில் உள்ள குற்றத்தை உடைத்தாம் ஆகலின், அக்குற்றம் இன்மையைக் குறித்தற்கு, “ஆற்றிய தெண்ணீர்” என்றார். ‘நெருப்பில் வைத்துக்காய்ச்சினும் குற்றம்படும்’ என்றற்கு, “வெயிலின்வைத்து” என்றார். நாற்றம் - நறுநாற்றம். மடுத்தல்- வாய்மடுத்தல். வேட்கை - தாகம்; “விடாவேட்கை”என்றாராயினும் ‘வேட்கை விடாமை’ என்றலேகருத்து. கண் அகன்று - இடம் பரந்து. துணர் - கொத்து. துறுமி- செறிந்து. வாலுகம் - வெண்மணல். ‘நிழலிற் செல்லாமல்வருந்துதல்’ என்க. தீங்கு - குற்றம். ‘செல்வ! பாக! கொழுந! தலைவன் தந்தை! குமரன் தாதை! மருதவாண! (உலகில் சிலர்துயர் உறுதல்) நின்னது குற்றம் யாது மில்லை; நின் நினைந்து காலனை வதைத்துச் சிறப்பொடு திரியாப் பாவம் பாவிகள்தமதே; அஃது எத்தன்மைத்து எனின், அடிசில்அட்டு இனிதிருப்ப ஒருவன் புசியரது வருந்துதல் அயினியின்குற்றம் அன்று; தெண்ணீர் இருப்ப, ஒருவன் மடாது வேட்கை விடாமை தெண்ணீர்க் குற்றம் அன்று; சோலை கிடப்ப, ஒருவன் நிழலிற் புகாது வெயிலில் வருந்துதல் நிழல் தீங்கன்று’என இயைத்து, ‘இவை போலும் தன்மைத்து’ என முடிக்க. 878. குறிப்புரை: “உரைத்தாலும்” என்பதன்பின், ‘அவ்வுரைகள் அனைத்தும்’ என்னும் எழுவாய் வருவித்துக் கொள்க. ஒரு தனையே
|