| 880. | புண்ணிய புராதன புதுப்பூங் கொன்றைக் கண்ணி வேய்ந்த ஆயிலை நாயக காள கண்ட கந்தனைப் பயந்த வாளரி நெடுங்கண் மலையாள் கொழுந |
| 5 | பூத நாத பொருவிடைப் பாக வேத கீத விண்ணோர் தலைவ முத்தி நாயக மூவா முதல்வ பத்தி யாகிப் பணைத்தமெய் யன்பொடு நொச்சி யாயினுங் கரந்தை யாயினும் |
| 10 | பச்சிலை இட்டுப் பரவுந் தொண்டர் கருவிடைப் புகாமற் காத்தருள் புரியும் திருவிடை மருத திரிபு ராந்தக மலர்தலை உலகத்துப் பலபல மாக்கள் மக்களை மனைவியை ஒக்கலை ஒரீஇ |
| 15 | மனையும் பிறவும் துறந்து நினைவரும் காடும் மலையும் புக்குக் கோடையில் கைம்மேல் நிமிர்த்துக் காலொன்று முடக்கி ஐவகை நெருப்பின் அழுவத்து நின்று மாரி நாளிலும் வார்பனி நாளிலும் |
| 20 | நீரிடை மூழ்கி நெடிது கிடந்தும் சடையைப் புனைந்துந் தலையைப் பறித்தும் உடையைத் துறந்தும் உண்ணா துழன்றும் காயுங் கிழங்குக் காற்றுதிர் சருகும் வாயுவும் நீரும் வந்தன அருத்தியுங் |
| 25 | களரிருங் கல்லிலுங் கண்படை கொண்டும் தளர்வுறும் யாக்கையைத் தளர்வித்(து) ஆங்கவர் அம்மை முத்தி அடைவதற் காகத் தம்மைத் தாமே சாலவும் ஒறுப்பர்; |
| 30 | ஈங்கிவை செய்யாது யாங்கள் எல்லாம் பழுதின் றுயர்ந்த எழுநிலை மாடத்துஞ் செழுந்தா துதிர்ந்த நந்தன வனத்துந் தென்றல் இயங்கும் முன்றில் அகத்துந் |