பக்கம் எண் :

925ஆளுடைய பிள்ளையார் திருவுலா மாலை

85.உரைப்பமரும் பல்புகழால் ஓங்கஉமை கோனைத்
திருப்பதிகம் பாடவல்ல சேயை - விருப்போடு


பல்லால் வெளிவிடப்பட்ட நஞ்சுகள். நஞ்சு ஒன்றே யாயினும் அதன் வேகம் ஏழாகச் சொல்லப்படுதல் பற்றிப் பன்மையாற் கூறினார்.

77. ஞானசம்பந்தர், திருநீலகண்டநாயனார் தமது யாழினைத் தாமே முறிக்க முயலும்படி யாழ் மூரிப் பதிகம் பாடினமை, திருமறைக்காட்டில் மறைக் கதவை அப்பர் திறக்கப் பாடியபின் அடைக்கப் பாடினமை, (78) திருக்கொள்ளம் பூதூரில் ஆற்றில் ஓட்டுவார் இன்றியே ஓடம் ஓடப் பாடினமை, திருச்செங்கோட்டில் கால வேறு பாட்டால் வருகின்ற காய்ச்சல் நோய் வாராதிருக்கப் பாடினமை, (79) திருவீழி மிழலையில் இறைவன் வாசி தீர்ந்த காசு தரப் பெற்றமை, திருநெல்வாயில் அரத்துறையில் முத்துச் சிவிகை முதலியன பெற்றமை, (80) திருவாவடுதுறையில் (தம் தந்தையார் செய்ய நினைத்த வேள்விக்காக) பொற்காசு ஆயிரம் நிறைந்த கிழியை இறைவன் அருளப் பெற்றமையும், (81) திருஓத்தூரில் ஓர் அடியவர்க்காக ஆண்பனை பெண்பனையாகப் பாடினமையும், (82) திருக்கோலக்காவில் இறைவன் பொற்றாளம் தரப் பெற்றமையும் ஆகிய அற்புத வரலாறு களைப் பெரிய புராணத்தில் இவரது புராணத்தில் காண்க. (77 - இரு - பெரிய. ஓடத் தொழில் - படகு ஓட்டும் தொழில் - கொங்கு - கொங்கு நாடு - பரிசனம் - சுற்றம். 79 - நித்தன் - அழிவில்லாதவன்; துங்கம் - உயர்ச்சி - புரிசை - மதில். இறைவன் ‘காசு கொண்டும்’ என்பதன் ஈற்று மகர மெய் சந்தி நோக்கிக் கெட்டது. (81) பாண் - பாணர் குலம். பரிசு - தன்மை (82) “பாணி” இரண்டில் முன்னது தாளம். ‘பாணர் குலத்தவரது தன்மைபோலக் கையால் தாளம் ஒத்தி’ என்க. சப்பாணி - சப்பாணி கொட்டுதல். அஃதாவது இரு கைகளையும் ஒன்று சேர்த்துக் கொட்டுதல். ‘சப்பாணிக்கு’ என நான்கன் உருபு விரிக்க. “பொன்” என்பது ஆகுபெயராய்ப் பொன்னால் ஆகிய தாளத்தைக் குறித்தது. ‘பொற்றாளத்தைச் சப்பாணி கொட்டு தற்குப் பெற்று’ என உரைக்க. தரா - பூமி. தலம் - இடம். தராதலத்துள் - நிலத்தினிடத்துள்.

கண்ணி - 83, 84, 85 - ஞானசம்பந்தர் அருளிச் செய்த பதிக வகைகள்:- இராகம் - முடுகிசை. இஃது ‘அராகம்’ என்றும் சொல்லப்படும். இருக்குக் குறள் - மந்திரம் போலச் சுருக்க மான குறுகிய பாடல்கள். பாசுரம் - இன்றியமையாப் பொருளை அறிவுறுத்தும் பாடல். பல் பத்து - பல் பெயர்ப் பத்து. இது சீகாழியின் பெயர்களை யெல்லாம் தொகுத்துக் கூறுவது. மா - பெரிய; என்றது “பேரியாழ்” என்பதாம். கருமை, வார்க் கட்டின் கருமை. யாழ் மூரி - யாழின் அளவைக் கடந்த பதிகம். மூரி - பெரியது. சக்கர மாற்று - சித்திரக் கவிகளில் ஒன்று இதனைக் கூறவே, மாலை மாற்று,