86. | நண்ணு புகழ்மறையோர் நாற்பத்தெண் ணாயிரவர் | | எண்ணின் முனிவரர் ஈட்டத்துப் - பண்அமரும் |
87. | ஒலக்கத் துள்இருப்ப, ஒண்கோயில் வாயிலின்கண் | | கோலக் கடைகுறுகிக் கும்பிட்(டு) ஆங்(கு) - ஆலும் |
88. | புகலி வளநகருட் பூசுரர் புக்(கு) ஆங்(கு) | | இகல்இல் புகழ்பரவி ஏத்திப் - புகலிசேர் |
89. | ‘வீதி எழுந்தருள வேண்டும்’ என விண்ணப்பம் | | ஆதரத்தால் செய்ய, அவர்க்கருளி, - நீதியால் |
கோமூத்திரி, எழுகூற்றிருக்கை ஆகிய ஏனைச் சித்திரக் கவிகளும், யமகம், ஏக பாதம் ஆகிய மிறைக் கவிகளும் இனம் பற்றித் தழுவிக் கொள்ளப்படும். இனித் தானச் சதி, ஈரடிமேல் வைப்பு, நாலடிமேல் வைப்பு ஆகியவைகளும் ஒருவகை மிறைக்கவிகளே. (84) ஈரடி - இரண்டடிப் பாடல்கள். முக்கால் - மூன்றடிப் பாடல்கள்; இவற்றில் இடையடி இடை மடக்காய் வரும். பாழிமை - வலிமை. 85. ஊழி உரைப்ப அமரும் - (மேற் கூறிய பாடல்களை யாவரும்) நீடுழி காலம் பாடும் படி நிலைத்திருக்கின்ற காரணத்தால் ‘உரைப்ப’ என்பதில் அகரம் தொகுத்தல் ‘பல் புகழால் ஓங்கப் பாட வல்ல சேய்’ என்க. சேய் - பிள்ளை. இங்கு, ‘திருப்பதிகம்’ தேவாரங்களைக் குறித்து வாளாபெயராய் நின்றது. 86. ‘சீகாழி அந்தணர்களுடன் தெய்வ முனிவர் நாற்பத்தெண்ணாயிரவரும் ஞானசம்பந்தரைச் சூழ்ந்திருந்தனர்’ - என்பதாம். அம்முனிவர் விண்வெளியிலே நின்றனர், என்க. எண்ணின் - எண்ணினை யுடைய. பண் - பண்ணுதல்; ஆயத்தப் படுத்துதல். அமரும் பொருந்திய. 87 - ஒலக்கம் - கொலு. 87. கோ இல் - தலைவரது இல்லம். கோலக் கடை - அழகிய இடம். ஆலும் - ஆரவாரிக்கின்ற (வேகத்தை ஓதுகின்ற) (88) ‘நகருள் வாழும் பூசுரர் கடைக் குறுகிக் கும்பிட்டு’ என மேலே கூட்டுக. இக்கும்பிடு வாயிலுக்குச் செய்தது. “வந்து அங்கு அவதரித்த வள்ளலை” என்பது முதல் (63) “திருப்பதிகம் பாட வல்ல சேயை” என்பது முடிய (85) ஒரு பொருள்மேல் வந்த பல பெயர்களும் ஏற்று நின்ற இரண்டன் உருபுகள் அனைத்தும் ஒரு தொடராய் அடுக்கி, இங்குப் போந்த, “கும்பிட்டு” - என்பதனோடே முடிந்தன. ‘ஆங்குக் கும்பிட்டு’ எனவும், (88) ‘ஆங்கு ஏத்தி’ எனவும் முடித்துக் கொள்க. இகல் இல் - மாறு பாடு இல்லாத. 89. ஆதரம் - விருப்பம். அருளி - உடன்பட்டு
|