பக்கம் எண் :

மூலமும் உரையும்11



  தென்புலக் கோமகன் றீத்தெறு தண்டமும்
நரகொடு துறக்கத் துழல்வரு பீழையும்
நீளா திம்பரின் முடித்து
65
  மீளாக் காட்சி தருதியின் றெனவே.

(உரை)

1 - 3: பாய்............................திரை

     (இ-ள்) பாய்திரை உடுத்த ஞாலம்-பரவிய அலைகளையுடைய கடலினை ஆடையாக உடுத்த உலகத்தில் வாழ்வோர்; முடிவு என்ன-இஃது இவ்வூழியின் முடிவுக் காலம் என்று அஞ்சாநிற்ப; முடங்கு உளைமுகத்து பல்தோள் அவுணனொடு-வளைந்த பிடரிமயிரையுடைய சிங்கமுகத்தினையும் பலவாகிய தோள்களையும் உடைய அசுரனோடே: செங்களம் மிடை உடு உதிரப் பொருது-குருதியால் சிவந்த போர்க்களத்தில் நெருங்கிய மீன்கள் உதிரும்படி போர் செய்து என்க.

     (வி-ம்.) பாய்-பரந்த; இயங்குகின்ற எனினுமாம். பாய்திரை அன்மொழித்தொகை. கடல் என்க. ஞாலம்-உலகம். ஆகுபெயர். உயிர் என்க. முடிவு-ஊழி முடிவு. முடங்குளை: அன்மொழித் தொகை. சிங்கம் என்க. பஃறோள் அவுணன் என்றது சிங்கமுகாசுரனை. உடு-விண்மீன்.

4-11: ஞாட்பினுள்.................................மாவின்

     (இ-ள்) ஞாட்பினுள் மறைந்து-அவ்வசுரன் ஞெரேலென அப் போர்க் களத்தினின்றும் மறைந்து போய்; நடுவுறு வரத்தால்-செம்மை மிக்க வரம் பெற்றுடைமையால்; வடவைநெடு நாக்கின் கிளைகள் விரிந்தாற்போல்; செந்துகிர் படரும் திரைக்கடல் புக்கு-சிவந்த பவளக் கொடிகள் படருதற்குக் காரணமான அலைகளையுடைய கடலின் கண்ணே புகுந்து; அகல் திரைப்பரப்பில்-அகன்ற அலைகளையுடைய அக்கடற் பரப்பில்; கிடந்து எரிவடவையின் தளிர்முகம் ஈன்று- கிடந்து எரியா நின்ற வடவைத்தீயின் கொழுந்து போலத் தன்னிடத்திலே தளிர்விட்டு; திரை எறிமலைகளின் கவடுபல போக்கி-அக்கடலின் அலைகளால் மோதப்படுகின்ற மலைகளைப் போலக் கிளைகள் பலவற்றையும் வளரச் செய்து; கல்செறி பாசியில் சினைக்குழை பொதுளி-அம் மலைகளிடத்தே செறிந்த பாசிகளைப் போன்று அக் கிளைகள் தோறும் தழைகள்