பக்கம் எண் :

12கல்லாடம்[கடவுள்வாழ்த்து]



நிரம்பப் பெற்று; சடை அசைந்து-வேர்கள் மேலே அசையப் பெற்று; கீழ் இணர் அலையாது நின்ற-கீழே பூங்கொத்துக்கள் அசையாமல் தலைகீழாய் நின்ற; மேல்பகை மாவின்-முற்பகையுடைய சூர்மாவினது என்க.

     (வி-ம்.) ஞாட்பு-போர்க்களம்; மறைந்து என்பது தன் மாயத்தாலே ஒளிந்து என்பதுபட நின்றது. நடுவறுவரம் என்றும் பாடம். இதற்கு, இடையில் அரசுரிமை அறுதற்குக் காரணமான வரம் உண்மையால் என்று பொருள் கொள்க. முகம்: ஏழனுருபு. கவடு-கோடு; மேற்பகை-முற்பிறப்பிற் கொண்ட பகை. வேர் மேலும் பூங்கொத்துக்கள் கீழுமாய் நின்றமா என்க.

12-15: ஓருடல்...............................வேலோய்

     (இ-ள்) ஓருடல் இரண்டு கூறுபட விடுத்த-ஓருடம்பு இரண்டு கூறுபட்டுப் பிளக்கும்படி விடுக்கப்பட்ட; அழியா பேர் அளி உமை கண் நின்று தன் பெயர் புணர்த்தி-ஒரு காலத்தும் அழித லில்லாத பேரருளையுடைய உமையம்மையார் நின் எதிர் நின்று சக்தி என்னும் தன் பெயரைச் சூட்டி; கற்பினொடு கொடுத்த-அதற்குரிய மந்திரத்தைக் கற்பித்தலோடு வழங்கப்பட்ட; அமையாவென்றி அரத்த நெடுவேலோய்-ஒழியாத வெற்றியினையுடைய நீண்ட சிவந்த வேற்படையினை யுடையோய் என்க.

     (வி-ம்.) ஓருடல் இரண்டு கூறுபட என்பழிச் செய்யுளின்பம் உணர்க அளி-அருள்; கண்ணின்று-கண்முன் நின்று: தன்பெயர்-சக்தி என்னும் தனது பெயர் என்க. கற்பு-கற்பித்தல். அப் படைக்குரிய மந்திரத்தைக் கற்பித்தலோடு என்க. அமையா- ஒழியா. அரத்த-சிவந்த.

16 - 22: கீழ்...........................அலைப்ப

     (இ-ள்) கீழ் மேல் நின்ற அ கொடுந்தொழில் கொக்கின்-கீழ் மேலாக நின்ற அந்தத்தீதொழிலையுடைய மாமரத்தினது இரண்டு கூறுஆய ஒரு பங்கு எழுந்து- இரு கூறாகியவற்றுள் ஒரு கூறு எழுந்து; பெருவரத்து மாயா ஒருமயிலாகி-பெரிய வரம் உண்மையால் அழியாத ஒரு மயிலுருவாகி; புடவி வைத்து ஆற்றிய பல் தலை பாந்தள்-நில வுலகத்தைத் தன் தலையில் வைத்துத் தாங்கிய பலவாகிய தலைகளையுடைய பாம்பாகிய ஆதிசேடனுடைய; மண்சிறுக விரித்த மணிபடம் தூக்கி-நில வுலகம் சிறுமை எய்தும்படி விரிக்கப்பட்ட மணிகளையுடைய படத்தை அலகாற் கொத்தித் தூக்கி; விழுங்கிய பல் கதிர் வாய்தொறும் உமிழ்ந்தென-விழுங்குதற்பொருட்டுப் பலவாகிய ஞாயிற்று மண்டிலங்களை எல்லா வாய்களாலும் உமிழ்ந்தாற் போல; மணிநிரை சிந்தி மண்புக அலைப்ப-