பக்கம் எண் :

மூலமும் உரையும்13



மணிவரிசையை மண்ணில் புகுமாறு சிதறி வருந்துதலாலே என்க.

     (வி-ம்.) கொடுந் தொழில்-கொலைத் தொழில். கொக்கு-மாமரம். ஒரு பங்கு-ஒரு கூறு. மாயா ஒரு மயில் என ஒட்டுக. பெருவரம் மாயாமைக்குக் குறிப்பேதுவாய் நின்றது. புடவி-நிலவுலகம். ஆற்றிய-சுமந்த. பஃறலைப் பாந்தள்-ஆதிசேடங் ஆயிரந்தலைகள் உண்மையின் அங்ஙனம் கூறினார். மண்சிறுக விரித்த மணிப்படம்-மண்ணுலகம் தனக்குள் அடங்கும்படி அகலிதாக விரித்த மணிகளையுடைய படம் என்க. படத்தைக் கொத்தித் தூக்கி என்க. விழுங்கிய:செய்யிய என்னும் வாய்பாட்டு வினையெச்சம். பண்டு விழுங்கிய பல் கதிர்களை என்பாருமுளர். கதிர்களை விழுங்குதல் ஆதிசேடன் அன்மையின் அது பொருந்தாமை அறிக. அம்மயில் படத்திற் கொத்தி விழுங்குதற் பொருட்டு அலைக்குங்கால் அப்பாம்பு தன் ஆயிரம் வாய்களினின்றும் உமிழும் மணிகளுக்கு ஞாயிற்று மண்டிலங்கள் உவமை என்க.

23 - 5: கார்..........................பொலிந்தோய்

     (இ-ள்) கார் விரித்து ஓங்கிய மலைத்தலை கதிரென-முகில்பரவப்பட்டு உயர்ந்துள்ள மலையினது உச்சியின்கண் தோன்றும் ஞாயிற்று மண்டிலம் போலே; ஓ அற போகிய சிறை விரிமுதுகில்-ஒழிவின்றி நீண்ட சிறகுகள் இருபாலும் விரித்தற்குக் காரணமன அம்மயிலின் முதுகின்மேல் எழுந்தருளி; புவனம் காண புகழொடு பொலிந்தோய்-உலகத்தார் காணும்படி வெற்றிப் புகழோடே விளங்கியோய்! என்க.

     (வி-ம்.) கார்விரித்து-கார்விரிக்கப்பட்டு என்க. கார்விரித்தோங்கிய மலை, இருபாலும் சிறகுகளை விரித்து உயர்ந்து நின்ற மயிலுக்கு உவமை. கதிர்-ஞாயிற்று மண்டிலம். இது முருகப்பெருமானுக்குவமை. ஓவற-ஒழிதலின்றி. சிறை-சிறகு. அம்மயிலின் முதுகில் என்க. புகழ்-வெற்றிப்புகழ். முருகப்பெருமானுக்கு ஞாயிற்று மண்டிலத்தை உவமை கூறுதலை, “உலகம் உவப்ப வலனேர்பு திருதரு, பலர்புகழ் ஞாயிறு கடற்கண் டாஅங்கு, ஓவற இமைக்குஞ் சேண்விளங்கவிரொளி” எனவரும் திருமுருகாற்றுப் படையினும் காண்க: (திருமுரு. 1.3)

26 - 31: போழ்படக்...............................அமைத்தோய்

     (இ-ள்) போழ்படக்கிடந்த ஒருபங்கு எழுந்து-பிளவுபடுதலாலே ஆங்கு எஞ்சிக்கிடந்த மற்றொரு கூறு எழுந்து; மின்னல் மாண்ட கவிர் அலர் பூத்த சென்னி-மின்னுதலாலே மாட்சிமைப்பட்ட முருக்கம் பூப்போன்று பொலிவுபெற்ற சூட்டினையுடைய; கொடும்பகை வாரணம் ஆகி-கொடிய பகைப்பண்பினையுடைய கோழிச் சேவலாகி; தேவர்மெய் பனிப்பு உற வான்மிடை உடுத்திறள் பொரியில் கொறிப்ப-தேவர்கள் உடல் நடுங்கும்படி