பக்கம் எண் :

14கல்லாடம்[கடவுள்வாழ்த்து]



வானத்தின்கண் நெருங்கியுள்ள மீண் கூட்டங்களைப் பொரிகளைக் கொறிக்குமாறு போலத் தன் அலகாற் கொத்திக் கொறியாநிற்ப; புரிந்த பொருள்நாடி-அச்சேவற் கோழி விரும்பிய செயலை ஆராய்ந்துணர்ந்து அதனால் உலகிற்குத் துன்பமுண்டாகாதபடி; தாமரை பழித்த கை மருங்கு அமைந்தோய்-செந்தாமரை மலரைப் பழித்தற்குக் காரணமான நின்னுடைய திருக்கையின் பக்கத்தே அச்சேவலைப் பற்றிக்கொடியாக அமைத்துக் கொண்டோய்! என்க.

     (வி-ம்.) போழ்-பிளவு. மின்னல்-மின்னுதல், ஒளிர்தல். மாண்ட-மாட்சிமைப்பட்ட. கவிர்-முள்முருக்கு. சேவலின் சூட்டிற்கு முள் முருக்கமலர் உவமை. கவிரலர்பூத்த- கவிரலர்போன்று பூத்த என்க. கொடும்பகை வாரணம் எனமாறுக. இக் கோழிச்சேவல் உலகினை அழித்தொழிக்கும் என்று கருதித் தேவர்கள் மெய் நடுங்கினர் என்க. பனிப்பு-நடுக்கம். பொரி-நெல் முதலியவற்றின் பொரி. கொறித்தல்-தின்னுதற் றொழிலின் விகற்பம். புரிந்த பொருள்-அக் கோழி விரும்பியகாரியம். அஃதாவது இவ்வுலகினை அழிப்பல் என்பது. தாமரை-ஈண்டுச் செந்தாமரை. கொடியாக அமைந்தோய் என்க.

32 - 4: ஒருமையுள்..................................மதியோய்

     (இ-ள்) நாரதன் ஒருமையுள் ஒருங்கி-நாரதமுனிவன் தன் மனத்தைப் புலன்களில் செல்லவிடாமல் ஒருவழிப்படுத்தி இருந்து, இருகை நெய் வார்த்து ஓம்பிய-தன் இரண்டு கைகளாலும் நெய் வார்த்து வலர்த்த; செந்தீக் கொடுத்த-சிவந்த வேள்வித்தீயினின்றும் தோற்றுவித்து வழங்கிய; திருகுபுரி கோட்டு தகர் வரும் மதியோய்-திருகுதலையுடைய முறுக்கோடு கூடின கொம்புகளையுடைய ஆட்டுக்கிடாயின்மேல் எழுந்தருளி வருகின்ற புலவனே! என்க.

     (வி-ம்.) ஒருமையுள்-ஒருவழியில் ஒருங்கல்-ஒருவழிப் படுத்தல். ஒருமையுள் இருவகை என்புழிச்செய்யுளின்பமுணர்க. ஓம்பிய-வளர்த்த. செந்தியினின்றும் தோற்றுவித்துக் கொடுத்த என்க. திருகுபுரிகோடு-திருகுதலையுடைய முறுக்குடைய கோடு என்க. தகர்-ஆட்டுக்கிடாய். தகரிவரும் என்றும்பாடம். இதற்குத் தகரில் ஏறிச் செலுத்துகின்ற என்க. மதியோய் என்றது புலவன் என்பதுபட என்றது. “மாலை மார்ப நூலறி புலவ” (திருமுருகு 291) எனப் பிறரும் ஓதுதல் காண்க. ஈண்டு முருகப் பெருமானுடைய மயிலும் சேவலும் தகரும் ஆகிய இவற்றைப்பற்றி,

“ஆரா வுடம்பினீ அமர்ந்து விளையாடிய
போரால் வறுங்கைக்குப் புரந்தர னுடைய
அல்லலில் அனலன் தன்மெய்யிற் பிரித்துச்
செல்வ வாரணங் கொடுத்தோன் வானத்து
வளங்கெழு செல்வன்றன் மெய்யிற் பிரித்துத்