பக்கம் எண் :

மூலமும் உரையும்15



திகழ்பொறிப் பீலி அணிமயில் கொடுத்தோன்
திருந்துகோன் ஞமன்றன் மெய்யிற் பிரிவித்
திருங்கண் வெள்யாட் டெழின் மறிகொடுத்தோன்
ஆஅங், கவரும் பிறரும் அமர்ந்துபடை யளித்த
மறியு மஞ்ஞையும் வாரணச் சேவலும்
பொறிவரச் சாபமு மரனும் வாளும்
செறியிலை யீட்டியும் குடாரியும் கணிச்சியும்
தறுகதிர்க் கனலியு மாலையு மணியும்
வேறுவே றுருவினிவ் வாறிரு கைக்கொண்டு
மறுவில் துறக்கத் தமரர்செல்வன்றன்
பொறிவரிக் கொட்டையோடு புகழ்வாரம் பிகந்தோய்”

(பரிபா. 5 செவ்-55-70)

என வரலாறு வேறாகவும் கூறப்பட்டுளது.

35 - 6: முலை.....................புணர்ந்தோய்

     (இ-ள்) முரண் இரண்டு குவடு என முலை மரீஇ-மாறுபாட்டினையுடைய இரண்டு மலைகள் என்று சொல்லும்படி இரண்டு முலைகளையும் பொருந்தி; குழல்காடு சுமந்த-கூந்தலாகிய காட்டினையும் சுமந்த; யானைமகள் புணர்ந்தோய்-தெய்வயானையைச் சேர்ந்தோய்! என்க.

     (வி-ம்.) குழற்காடு சுமந்த யானைமகளின் முலை மரீஇப் புணர்ந்தோய் எனக் கொண்டு கூட்டினுமாம். முரண் மாறுபாடு. குவடு-மலை. மரீஇ-மருவி. குழற்காடு: பண்புத்தொகை. குழல்-கூந்தல். யானை மகள்-தெய்வயானை.

37 - 8: செங்கண்................................மலையோய்

     (இ-ள்) செங்கண் குறவர் கருங்காட்டு வளர்த்த-சிவந்த கண்களையுடைய குன்றக் குறவர் கரிய காட்டின்கண் பேணி வளர்த்த; வள்ளி பைங்கொடி படர்ந்த புயமலையோய்-வள்ளியாகிய பசிய பூங்கொடியானது படரப்பெற்ற திருத்தோள்களாகிய மலையினையுடையோய்! என்க.

     (வி-ம்.) செங்கண் கருங்காடு என்புழிச் செய்யுளின்பம் உணர்க. வள்ளிப்பைங்கொடி என மாறுக. கொடி படர்ந்த என்பதற்கேற்பப் புயமலை என்றார். மலையில் கொடி படர்தல் இயல்பாதல் உணர்க.

39 - 42: இமயம்.................................வைத்தோய்

     (இ-ள்) இமயம் சுனைபூத்த மாண் தொட்டில்-இமயமலையின் கண்ணதாகிய சுனையின்கண் மலர்ந்த மாண்புடைய தாமரை மலராகிய தொட்டிலின்கண்; அறிவில்தங்கி-மெய்யறி